Showing posts with label Vijay. Show all posts
Showing posts with label Vijay. Show all posts

விஜய்யின் 50 வது படமான சுறாவுக்கு எந்த வெட்டும் இல்லாமல் கிளீன் யு சான்று வழங்கியுள்ளது சென்சார் போர்டு.

ஏப்ரல் 30 ம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ள சுறா படத்தை சங்கிலி முருகன் தயாரித்துள்ளார். சன் பிக்ஸர்ஸ் வெளியிடுகிறது.

வழக்கமான விஜய் படம் என்றாலும் விறுவிறுப்பான பொழுது போக்குப் படமாக உள்ளதாக படத்தைப் பற்றி பாஸிடிவ் டாக் பரவியிருப்பதால், நல்ல விலைக்கு வாங்கியுள்ளனர் விநியோகஸ்தர்கள்.

தெலுங்கில் வெளியான பாடல்களையே மணிஷர்மா இந்தப் படத்துக்காக ரீமேக் பண்ணியிருக்கிறார். ஆனாலும் சன் பிக்ஸர்ஸ் புண்ணியத்தில் பாடல்கள் ஹிட் ரகத்தில் சேர்ந்துவிட்டன.

நேற்று படம் பார்த்த சென்சார் குழுவினர் எந்த இடத்திலும் கை வைக்காமல் படத்துக்கு அனைவரும் பார்க்கலாம் என்ற யு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

இந்தப் பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் படத் தலைப்புகளை தனுஷ் ரிசர்வ் செய்துவிட, அந்தப் பக்கம் புரட்சித் தலைவரின் படப் பெயர்களை விஜய் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்.

அவர் அடுத்த நடிக்கும் படத்துக்கு காவல்காரன் என்ற பெயரைச் சூட்டியுள்ளார். படப்பிடிப்பும் இன்று ஆரம்பித்துள்ளது.

குண்டடிபட்டு பேச முடியாமல் மருத்துவமனையிலிருந்த எம்ஜிஆர் மீண்டும் வருவாரா, படங்கள் நடிப்பாரா என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் விரைவில் குணமடைந்து முன்னிலும் வேகத்தோடு நடித்துக் கொடுத்த படம் காவல்காரன். பெரிய ஹிட்!

இந்தத் தலைப்பைத்தான் விஜய் தனது 51வது படத்துக்குப் பயன்படுத்தியுள்ளார்.

ஏற்கெனவே வேட்டைக்காரன் என்ற தலைப்பைப் பயன்படுத்தினார் விஜய். உரிமைக்குரல், மீனவ நண்பன், எங்கள் தங்கம் போன்ற படங்களின் பெயர்களையும் பதிவு செய்து வைத்துள்ளனர் விஜய்க்காக.

காவல்காரன் படத் தலைப்புக்காக சத்யா மூவீஸாருடன் பேசி அனுமதியும் வாங்கி விட்டனராம்.

மலையாளத்தில் வெளியான பாடிகார்டு படத்தின் தமிழாக்கம்தான் இந்த காவல்காரன். விஜய்க்கு இதில் ஜோடி அசின். இருவரும் இணையும் மூன்றாவது படம் இது.

வடிவேலு படம் முழுக்க விஜய்யுடன் வருகிறார். காரணம் அவருக்கு விஜய்யைக் கண்காணிக்கும் வேடமாம்!

ராஜ்கிரண் முதல் முறையாக விஜய்யுடன் நடிக்கிறார். படத்தில் இவரது மகளான அசினுக்குதான் பாடிகார்டாக வருகிறார் விஜய். மீதிக் கதையும் காட்சிகளும் உங்களுக்கே தெரிகிறதல்லவா...!

இளைய தளபதி விஜயின் சுறா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இத்திரைப்படம் சன் பிக்சர் வெளியீடாக புதுவருட தினத்தன்று வெளிவர இருக்கிறது.


பாடல் வெளியீட்டு விழாவில் முன்னணி நடிக நடிகையர் மற்றும் இயக்குனர்கள் , திரையுலக முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


இவ்விழாவில் பேசிய முன்னணி இயக்குனர் அமீர், திரையுலகில் ஒரு எம்ஜிஆர், அவருக்குப் பிறகு ரஜினி என்பதுதான் இப்போதைய நிலவரம். அந்த வரிசையில் விஜய்யையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த இடத்தை அவர் அடைய 50 படங்களில் நடித்துள்ளார். பெரும் போராட்டங்களைச் சந்தித்துள்ளார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒரு படம் முடியும் போது அடுத்தப் படம் தொடங்கியிருக்கும். இது விஜய் பாலிஸி. நேற்று பத்தி‌ரிகையாளர்கள் யாரையும் அழைக்காமல் சுறா படத்தின் ஆடியோவை வெளியிட்டது சன் பிக்சர்ஸ். (பத்தி‌ரிகையாளர்கள் வந்தால் படம் எடுப்பார்கள், பத்தி‌ரிகையில் பிரசுரமாகும். பிறகு சன் தொலைக்காட்சியில் ஆடியோ வெளியீட்டு விழாவை ஒளிபரப்பும் போது ரசிகர்களுக்கு அது பழசாகிவிடும்.)

ஏப்ரலில் சுறா வெளியாகிறது. அதற்குமுன் தனது அடுத்தப் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார் விஜய்.

விஜய்யின் 51வது படத்தை சித்திக் இயக்குகிறார். மலையாளத்தில் இவர் இயக்கிய பாடிகா‌ர்ட் படம்தான் சில மாறுதல்களுடன் விஜய்க்காக தயாராகியிருக்கிறது. இதில் விஜய் ஜோடியாக அசின் நடிக்கிறார்.

ஏப்ரல் 7ஆம் தேதி கும்பகோணத்தில் படப்பிடிப்பை தொடங்க விஜய் திட்டமிட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. பெய‌ரிடப்படாத இந்தப் படத்தில் அசின் தந்தையாக ரா‌ஜ்கிரண் நடிக்கிறார்.





பாடல்களைப் பெற பாடலின் மேல் சுட்டியைச் சொடுக்கவும்.

சிறகடிக்கும் நிலவு

சுறா முடிந்துவிட்டது. இன்று அதன் ஆடியோ வெளியீட்டு விழா. ஏப்ரல் 14 படம் திரைக்கு வருகிறது.

ஒரு படம் முடிந்து அது திரைக்கு வரும் இடைவெளியில் ரசிகர்கள் சந்திப்பு, நற்பணி கோலாகலம் என விஜய் தமிழகத்தை வலம் வருவது வழக்கம். வேட்டைக்காரன் ‌ரிலீஸையொட்டி புதுக்கோட்டை, புதுச்சே‌ரி என டூர் அடித்தவர் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை சில இடங்களில் தொடங்கி வைத்தார்.

விஜய்யின் சுறா டூர் திருச்சியில் தொடங்கியது. நேற்று திருச்சி சென்ற விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகி வீராவின் திருமணத்தில் கலந்து கொண்டார். மேலும் அதே மேடையில் 24 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தையும் அவர் நடத்தி வைத்தார். இந்த 24 பேருக்கும் விஜய் செலவில் சீர்வ‌ரிசை செய்யப்பட்டது.

பிறகு ரசிகர்களிடம் பேசியவர், படத்துக்காக பல மாதங்கள் கடுமையாக உழைக்கும் தனக்கு இப்படி ரசிகர்களை சந்திப்பதுதான் உற்சாக டானிக் என்றார். இந்த இலவச திருமண விழாவில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும் கலந்து கொண்டார்.

திருச்சியில் தொடங்கிய விஜய்யின் நற்பணி டூர் சுறா ‌ரிலீஸுக்குப் பின்பும் தொடரவுள்ளது.


திருச்சி மாவட்ட தலைமை இளைய தளபதி விஜய் நற்பணி இயக்கத்தின் கவுரவ தலைவர் பி.எஸ்.வீரா திருமணம் நேற்று திருச்சியில் தாஜ் திருமண ஹாலில் நடந்தது. நடிகர் விஜய் தலைமை தாங்கி வீரா திருமணத்தை நடத்தி வைத்தார்.

அதே மேடையில் 24 ஏழை ஜோடிகளுக்கு நடிகர் விஜய் இலவச திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்கள் விஜய் முன்னிலையில் மாலை மாற்றி கொண்டனர். அப்போது அவர், கட்டில், பீரோ, பாத்திரங்கள் உள்பட 51 பொருட்களை திருமண சீர்வரிசை பொருட்களாக வழங்கினார். மணமக்கள் ஒவ்வொரு ஜோடியாக விஜய் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

அப்போது பேசிய அவர், ‘’ஒரு படத்தில் நடித்து முடிக்க 6 மாதம் ஆகிறது. 6 மாதம் கஷ்டப்பட்டு நடிக்கிறோம். இந்த நிலையில் இது போன்று ரசிகர்களை சந்திக்கும் போது தான் எனக்கு உற்சாக டானிக் கிடைக்கிறது.

நானும் உங்களில் ஒருத்தன். உங்கள் குடும்ப பிரச்சினை தீர்ப்பதில் எனக்கு பங்கு உண்டு. சிறுவயதில் என் தங்கை இறந்து விட்டார். ஆனால் இப்போது 24 தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து இருக்கிறேன். இதை நான் மறக்க முடியாது.

சுறா படத்தில் நான் பேசும் வசனத்தில், அமைதியாக போவதற்கு நான் ஒன்று புதிய ஆள்அல்ல. உன்வலையில் விழுவதற்கு இறால் அல்ல. நான் சுறா என்பேன். அதுபோல நான் யார் வலையிலும் சிக்க மாட்டேன்’’என்று பேசினார்.






எக்ஸ்பிரஸ் வேகத்தில் வேலை செய்கிறார் சித்திக். விஜய்யை வைத்து இயக்கும் பாடிகார்ட் படத்தின் தமிழ் ‌ரீமேக்கிற்காகதான் இந்த எக்ஸ்ட்ரா வேகம்.

விஜய் ஜோடி அசின், இசை வித்யாசாகர், மூன்று பாடல்கள் யுகபாரதி, பா.விஜய், விவேகா இருவருக்கும் தலா ஒரு பாடல், அசின் தந்தையாக ரா‌ஜ்கிரண், காமெடிக்கு வடிவேலு, எம்.எஸ்.பாஸ்கர், ஒளிப்பதிவு ஏகாம்பரம்... ஏறக்குறைய படத்தின் எல்லா அம்சங்களும் முடிவாகிவிட்டது. விஜய்யின் மாஸ் இமேஜுக்கு ஏற்றபடி காட்சிகளும் மாற்றப்பட்டுவிட்டன.

அனைத்தும் தயாரான நிலையில் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். அனேகமாக ஏப்ரல் 1ஆ‌ம் தேதியே பட வேலைகள் தொடங்கப்படலாம் என்கிறார்கள்.

விஜய், சிம்ரன் நடித்த ப்‌ரியமானவளே படத்தை தயா‌ரித்தவர்கள் இந்த ‌ரீமேக்கை தயா‌ரிக்கின்றனர்.

வரும் ஏப்ரல் 14 சித்திரைத் திருநாளையொட்டி விஜய் நடித்த சுறா மற்றும் சூர்யா நடித்த சிங்கம் படங்கள் வெளியாகின்றன.

விஜய் நடித்த சுறா படத்தை வரும் ஏப்ரல் இறுதி வாரத்தில் வெளியிடுவதாக முதலில் திட்டமிட்டிருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஆனால் எப்படியாவது இந்தப் படத்தை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட்டுவிட வேண்டும் என்று விஜய் விரும்பினாராம்.

அதே சமயம், ஏப்ரல் 14-ம் தேதி சிங்கம் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தது சன். இந்தப் படத்தின் உரிமையையும் சன்தான் வாங்கியுள்ளது.

இதுவரை ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே ரிலீஸ் பண்ணி வந்தது சன். இந்த முறை சுறா, சிங்கம் இரு படங்களையும் ஏப்ரல் 14-ம் தேதியே வெளியிட்டுவிட தீர்மானித்துள்ளனர்.

இதனால் சுறா - சிங்கம் இரு படங்களுமே ஒரே நாளில் வெளியாக உள்ளன.

இது விஜய் - சூர்யா ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. இன்னொரு பக்கம் எந்தப் படத்துக்கு நல்ல தியேட்டர்களைப் பிடிப்பது என்பதிலும் லேசான உரசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் பலருடன் இணைந்து நடித்திருக்கிறார். ஆனாலும் ரா‌ஜ்கிரணுடன் இணைந்து நடித்ததில்லை. முதல் முறையாக ஒரு படத்தில் இவர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

விஜய்யின் 51வது படத்தை சித்திக் இயக்குகிறார் என்பது ஏறக்குறைய முடிவாகிவிட்டது. வித்யாசாகர் இசையில் மூன்று பாடல்கள் கம்போஸாகிவிட்டன. இந்த மூன்று பாடல்களுக்கும் வ‌ரிகள் எழுதியவர் யுகபாரதி.

சித்திக்கின் சமீபத்திய மலையாளப் படம் பாடிகா‌ர்ட். திலீப், நயன்தாரா நடித்த இந்தப் படத்தின் கதையை விஜய்க்காக சிறிது மாற்றியிருக்கிறார் சித்திக். நயன்தாராவின் வேடத்தில் நடிப்பவர் அசின். அசினின் தந்தையாக நடிக்க ரா‌ஜ்கிரணை தேர்வு செய்துள்ளனர். விஜய், ரா‌ஜ்கிரண் இணைவது இதுவே முதல் முறை.

சுறாவைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏகம்பரமே ஒளிப்பதிவு செய்கிறார்.

விஜய்யின் 51வது படத்தை யார் இயக்குகிறார்கள் என்பது இன்னமும் இழுபறியாகவே இருக்கிறது. 51வது படத்தை நாங்கதான் தயா‌ரிக்கிறோம், ஜெயம் ராஜா இயக்குகிறார் என ஓபனாகவே அறிவித்துள்ளது ஆஸ்கர் பிலிம்ஸ்.

அதேநேரம் தனது பாடிகார்ட் படத்தின் ‌‌ரீமேக்கில்தான் விஜய் நடிக்கிறார் என்பது போல அவசர அவசரமாக வேலைகளை முடுக்கிவிட்டுள்ளார் இயக்குனர் சித்திக்.

பட அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிடும் முன்பே படத்தின் பாடல் கம்போஸிங்கை வித்யாசாகரை வைத்து முடித்துள்ளார் சித்திக். மொத்தம் ஆறு பாடல்கள் இதுவரை முடிவடைந்துள்ளன. அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பவர் யுகபாரதி.

இந்த சுறுசுறுப்பு காரணமாக விஜய்யின் 51வது படம் சித்திக்கிற்குதான் என்கிறார்கள் இன்டஸ்ட்‌ரியில். ஆஸ்கர் விட்டுக் கொடுக்குமா இல்லை வம்புக்கிழுக்குமா என்பது சுறா வெளிவந்த பிறகு தெ‌ரிந்துவிடும்.

விஜய்யின் 50வது படம் என்ற கெத்துடன் காஸ்ட்லியாகவே தயாராகியிருக்கிறது சுறா. சங்கிலி முருகன் தயா‌ரித்திருக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.

வேட்டைக்காரன் படம் முடிந்தும் வெளியிடாமல் இழுத்தடித்த சன் பிக்சர்ஸ், சுறா விஷயத்தில் காட்டுவது ஜெட் வேகம். தீபாவளிக்குப் பார்த்தால் போதும் என்றுதான் சொன்னார்கள். ஆனால் சன் பிக்சர்ஸ் முடுக்கிவிட்ட வேகத்தில் அடுத்த மாதமே படம் திரைக்கு வருகிறது.

முன்னோட்டமாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை விம‌ரிசையாகக் கொண்டாட இருக்கிறார்கள். இதற்காக தேர்வு செய்திருக்கும் தேதி மார்ச் 26. அன்று சுறாவின் பாடல்களை வெளியிடுகிறார்கள்.

மணிசர்மா சுறாவுக்கு இசையமைத்திருக்கிறார். இவரும் விஜய்யும் இணைந்து பணியாற்றிய அனைத்துப் படங்களின் பாடல்களும் சூப்பர்ஹிட் என்பதால் சுறா பாடல்களும் நிச்சயம் ஹிட்டாகும் என்பதில் விஜய்யின் எதி‌ரிகளுக்கே நல்ல நம்பிக்கை இருக்கிறது.

விஜய் ஜோடியாக முதல் முறையாக தமன்னா நடித்துள்ளார்.

விஜய்யின் சுறா படத்தை திட்டமிட்டதற்கு முன்பாகவே வெளியிட தீர்மானித்திருக்கிறது சன் பிக்சர்ஸ். அனேகமாக படம் ஏப்ரலில் திரைக்கு வரலாம் என்கிறார்கள்.

வேட்டைக்காரன் படத்துக்குப் பிறகு விஜய் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது சுறா. விஜய்யின் 50வது படம் என்பதால் எக்ஸ்ட்ரா கவனம் எடுத்து படத்தை செதுக்கியிருக்கிறார்கள். படத்தை இயக்கியிருப்பவர் ராஜகுமார், அழகர்மலை படத்தை இயக்கியவர்.

வடிவேலு, தமன்னா என்று வெயிட்டான நட்சத்திரங்களுடன் தயாராகியிருக்கும் சுறாவின் சில பகுதிகளை மலையாளத்தில் வெளியான சோட்டா மும்பை படத்தை தழுவி எடுத்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் மெயின் கதை வேறு. மீனவர்க‌ள், கடல் என்று விஜய் இதுவரை புழங்காத ஏ‌ரியா.

தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம் அடுத்த மாதமே திரைக்கு வரவிருக்கிறது என்கிறார்கள் உற்சாகமாக. படத்தை வாங்கியிருக்கும் சன் பிக்சர்ஸ் காட்டும் ஆர்வமும், அவசரமும்தான் இதற்கு காரணம் என்கிறார்கள். ஏப்ரல் 14 படத்தை திரையில் பார்க்கலாம் என்கிறது விஜய் தரப்பு.

ரசிகர்களுக்கு தீபாவளி ஏப்ரலிலேயே வருவது நல்லதுதானே.

தமன்னா... இன்றைய தேதியில் தமிழின் நெ.ஒன் நடிகை. இதைச் சொன்னால் அப்படியா என்று அப்பாவியாக முகம் மலர்கிறது. தனுஷ், சூர்யா, பரத், கார்த்தி, ஜெயம் ரவி இப்போது விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவரைப் பற்றிய லேட்டஸ்ட் வதந்தி, அதிகமாக சம்பளம் கேட்கிறார். புகழ்ச்சிக்கு மட்டுமல்ல இந்த புறணிக்கும் பொறுமையாகவே பதில் வருகிறது தமன்னாவிடமிருந்து.

கே.வி.ஆனந்தின் கோ படத்தில் முதலில் ஒப்பந்தமான நீங்கள் அந்தப் படத்திலிருந்து விலகியதற்கு அதிக சம்பளம் கேட்டதே காரணம் என்கிறார்களே, இது உண்மையா?

படத்தின் கதை, இயக்குனர், தயா‌ரிப்பு நிறுவனம், உடன் நடிக்கும் நடிகர் இவையெல்லாவற்றையும் வைத்துதான் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறேன். சம்பளத்தைப் பொறுத்தவரை எனக்கு தகுதியான சம்பளத்தையே கேட்கிறேன், தயா‌ரிப்பாளர்களும் தருகிறார்கள். ஒரு படத்துக்கு கொடுக்கும் கால்ஷீட்டைப் பொறுத்தே சம்பளம் வாங்குகிறேன். அதனால் அதிக சம்பளம் கேட்கிறேன் என்ற பேச்சுக்கே இடமில்லை.

சக நடிகைகளுடன் உங்களுக்கு தகராறு என்று வரும் செய்திகள்...?

பையா படத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது. ஏதோ சில காரணங்களால் அவர் அதில் நடிக்கவில்லை, நான் நடித்தேன். நான் நடிக்காவிட்டாலும் வேறு யாராவது நடித்திருப்பார்கள். இதை வைத்து எனக்கும் நயன்தாராவுக்கும் லடாய் என்று எழுதினார்கள். மீடியாக்கள் அப்படி எழுதியதே தவிர எனக்கும் அவருக்கும் நடுவில் எந்த‌ச் சண்டையும் இல்லை.

இப்போது நடித்துவரும் படங்கள்?

ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி என்ற படத்தில் நடிக்கிறேன். படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான கிக் படத்தின் ‌ரீமேக்தான் இது. ஜெயம் ராஜா இயக்கியிருக்கிறார். ஒரு பாடல் காட்சியை புதுமையாக எடுத்திருக்கிறார்கள். ஷோபி மாஸ்ட‌ரின் கோ‌ரியோகிராஃபியில் நானே என்னுடைய நடனத்தை புதிதாக உணர்ந்தேன்.

இதுதவிர விஜய்யுடன் சுறாவில் நடித்து வருகிறேன். விஜய் எனக்குப் பிடித்த நடிகர். சின்சியர் வொர்க்கர். அவருடைய காம்பினேஷனில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

சுறாவில் உங்களுக்கு என்ன மாதி‌ரியான வேடம்?

சிட்டி கேர்ள். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். படம் பார்த்து தெ‌‌ரிந்து கொள்ளுங்கள்.

கல்லூரி வரை நீங்கள் கவனிக்கப்படாத நடிகை. இப்போது தமிழின் முதல்வ‌ரிசை நடிகைகளில் ஒருவர். இந்த மாற்றத்தை எப்படி உணர்கிறீர்கள்?

உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயம். இப்படியொரு இடத்துக்கு வருவேன் என்று நான் நினைக்கவில்லை. அதேநேரம் இந்த இடம்தான் என்னுடைய லட்சியமாக இருந்தது. என் லட்சித்துக்கு படிக்காதவனும், அயனும் ரொம்பவே உதவியது என்றுதான் சொல்ல வேண்டும்.

பையா படத்திற்காக கார் ஓட்ட கற்றுக் கொண்டீர்களாமே?

எனக்கு கார் ஓட்ட தெ‌ரியும். பையாவுக்காக பயிற்சி எடுத்துக் கொண்டேன். என்னுடைய கே‌ரிய‌ரில் பையா முக்கியமான படமாக இருக்கும்.

நாலு படம் நடித்ததும் இந்திப் பக்கம் ஒதுங்குவதுதான் இப்போது பேஷன். நீங்கள் எப்படி?

தமிழில் எனக்கு என்று ஒரு இடம் இப்போது இருக்கிறது. முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறேன். அதனால் இந்தியில் நடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஒருவேளை வாய்ப்பு வந்தால்...?

கதை நன்றாக இருந்தால், யோசிக்கவே மாட்டேன், கண்டிப்பாக நடிப்பேன்.

3 இடியட்ஸ் படத்தை விஜய் ரீமேக் செய்கிறார் என்பது உறுதியாகிவிட்டது.

இந்தப் படத்தை வசூல்ராஜா, குட்டி போன்ற படங்களைத் தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரிக்கிறது.

அமீர்கான் வேடத்தில் விஜய் நடிக்கிறார். மாதவன் நடித்த பாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பார் எனத் தெரிகிறது. மூன்றாவது நாயகனாக புதுமுகம் ஒருவரை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.

இந்தப் படத்தை விஷ்ணுவர்தன் இயக்குவார் என்று தெரிகிறது. படம் குறித்த விவாதம் நடந்து வருவதாகவும், இன்னும் சில தினங்களில் இறுதி அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விஜய் இப்போது சுறா படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு மலையாள பாடிகார்டு படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார். சித்திக் இயக்குகிறார். அதந் பிறகு ஜெயம் ராஜா படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்போது 3 இடியட்ஸ் ரீமேக் வந்திருப்பதால் எந்தப் படத்தை முதலில் துவங்குவார் என்று தெரியவில்லை.



கமல் மகள் ஸ்ருதி இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கக் கூடும் என்கிறார்கள்.

விஜய்யின் கைவசம் உள்ள, சுறா உள்ளிட்ட 4 படங்களுமே ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது!

மே மாதம் நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக ப‌ரிமாணம் கொள்கிறது. அரசியல் பிரவேசத்தையொட்டி சீமான் பரபரப்பாக இருப்பார் என்று பார்த்தால், ‌ரிலாக்சாக அடுத்தப் படத்துக்கான கதை விவாதத்தில் இருந்தார். படத்தின் ஹீரோ விஜய்.

தாணு தயா‌ரிப்பில் சீமான் இயக்கும் பகலவன் படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்டது. படத்தின் ஒன் லைன் சொல்லி விஜய்யின் சம்மதத்தையும் வாங்கிவிட்டார் சீமான். ஜெயம் ராஜா, சித்திக் இயக்கும் படங்களுக்குப் பிறகு பகலவன் படப்பிடிப்பில கலந்து கொள்கிறார் விஜய்.

ஏப்ரல், மே மாதங்களில் அரசியல் பணிகள் இருக்கும் என்பதால் இப்போது பகலவன் ஸ்கி‌ரிப்டை முடிக்கும் பணியில் சீமான் ஈடுபட்டிருக்கிறார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் சீமான் கூறிய இரண்டு கதைகளில் ஒன்று இந்த பகலவன் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தமிழக அரசின் புதிய சட்டப்பேரவை வளாகம் மற்றும் தலைமைச் செயலக கட்டடம் திறப்பு விழா, மிகவும் கோலாகலமாகவும் கண்ணியமான முறையிலும் நடந்தது.

தமிழக புதிய சட்டசபை - தலைமை செயலக கட்டிடம், சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது.

முதல்வர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில், சட்டமன்றம், தலைமை செயலகம் என இரு பிரிவுகளாக இந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதில், சட்டமன்ற வளாகம் பசுமை கட்டிடமாக அமைக்கப்பட்டு உள்ளது.

ரூ.450 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சட்டசபை மற்றும் தலைமை செயலக கட்டிட வளாக திறப்பு விழா, சட்டமன்ற வளாகம் அமைந்துள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.

பிரமாண்ட பந்தல்

திறப்பு விழாவையொட்டி, 8 ஆயிரம் பேர் அமரும் வகையில் பெரிய பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தனி விமானம் மூலம் சென்னை வந்தனர்.

கருணாநிதி நேரில் போய் வரவேற்பு

இந்த விழாவின் ஒவ்வொரு அசைவையும் முதல்வர் கருணாநிதியே தீர்மானித்தார். அதிகாலை 5 மணிக்கே திறப்பு விழா அரங்குக்கு வந்தவர் ஒவ்வொரு விஷயத்தையும் அருகிலிருந்து சொல்லிச் சொல்லி செய்ய வைத்தார்.

பிற்பகலில் மன்மோகன் சிங்கும் சோனியாவும் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இறங்கியதும் அவர்களை தானே முன்னின்று வரவேற்றார் முதல்வர். பூங்கொத்து அளித்து சால்வை போர்த்தி மரியாதையும் செய்தார்.

காங்கிரஸ் தலைவரை வரவேற்ற பாஜக முதல்வர்

விமான நிலையத்தில் சோனியா காந்தி வந்ததும் அவரை முதல்வர் கருணாநிதி, ஆந்திர முதல்வர் ரோஸய்யா ஆகியோருடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் வரவேற்றது வித்தியாசமாகவும் அரசியல் பண்புக்கு இலக்கணமாகவும் அமைந்தது.

எடியூரப்பா பாஜக ஆளும் மாநில முதல்வர், எதிர்கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும், காங்கிரஸ் தலைவர் சோனியாவை வரவேற்க ஆர்வத்தோடு முன்வந்தார். சோனியாவும் மகிழ்வுடன் அவருக்கு வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்தார்.

தமிழகமும் ஆந்திரமும் இணைந்தே இருந்தன! - ரோஸய்யா

விமான நிலையத்தில் ஆந்திர முதல்வர் ரோஸய்யாவுடன் இந்த விழா குறித்து கேள்வி கேட்டனர் நிருபர்கள். அதற்கு அவர், "நாங்கள் அண்ணன் தம்பிகள். இதற்கு முன் மெட்ராஸ் மாகாணமாக தமிழகமும் ஆந்திரமும் இணைந்தே இருந்தன. இப்போது எல்லைகள் பிரிந்திருந்தாலும் இணக்கமாக இணைந்தே செயல்படுகின்றன. இது தொடரும்" என்றார்

வீல்சேருக்கு விடை கொடுத்தார்

நேற்றைய விழாவில் இன்னொரு சிறப்பு, முதல்வர் வீல்சேர் இல்லாமலே திறப்பு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுதான். மன்மோகன் சிங் ரிப்பன் வெட்டிய போதும் சரி, பின்னர் அவர்களை பேட்டரி காரில் அழைத்துச் சென்ற போதும் சரி, தனது வயது மற்றும் உடல்நிலையை மீறிய உற்சாகத்துடன் அவர் காணப்பட்டார்.

விழா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் குறித்த அறிவிப்பு ஒலித்த போது, தன்னிச்சையாக அவர் எழுந்து நிற்க முயன்றது, பார்வையாளர்களையும் சோனியாவையும் கண்கலங்க வைப்பதாக இருந்தது.

மேடையில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி பொன்னாடை அணிவித்தார். மன்மோகன்சிங், தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பொன்னாடையை பெற்றுக்கொண்டார். கருணாநிதிக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் பொன்னாடை அணிவித்தார்.

ரஜினி - கமல் ஆப்ஸென்ட்!

இந்த விழாவில் கட்டாயம் எதிர்பார்க்கப்பட்ட கலைத்துறை பிரமுகர்கள் ரஜினி யும் கமலும் கடைசி வரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீப கால விழா சர்ச்சைகள் காரணமாக இருவரும் இந்த விழாவை தவிர்த்திருக்கக் கூடும் என்று கூறப்பட்டது.

ஆனால் இளம் நடிகர்களில் விஜய்யும் அஜீத்தும் தவறாமல் ஆஜராகியிருந்தனர். நடிகர்கள் பெரும்பாலும் ஆஜராகிவிட்டிருந்தனர். சினிமாக்காரர்களுக்கென்று தனி பகுதியே ஒதுக்கியிருந்தார் முதல்வர்.

ரூ 24 கோடியில் பெரும் பாதுகாப்பு .. போக்குவரத்து ஸ்தம்பிப்பு

இந்த விழாவுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அண்ணா சாலை முழுக்க 5000 போலீசார் குவிக்கப்பட்டனர்.

பிரதமர் அண்ணாசாலையில் வரும்போது மாலை 4 மணிக்கு மேல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போலீசார் முன்கூட்டியே போக்குவரத்து நிறுத்தம் பற்றி அறிவிப்பு வெளியிட்டனர்.

அண்ணாசாலையே பலத்த பாதுகாப்பு அரணோடு காணப்பட்டது. ஒவ்வொரு சிக்னல் சந்திப்பிலும் 2 உதவி கமிஷனர்கள் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அண்ணாசாலையில் வழிநெடுக உள்ள அனைத்து உயரமான கட்டிடங்களிலும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

நிகழ்ச்சி நடந்த சட்டசபை வளாகத்தை சுற்றிலும் 2,500 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அந்த பகுதியில் உள்ள கடைகளும் பாதுகாப்பு கருதி அடைக்கப்பட்டிருந்தன.

புதிய சட்டசபை வளாகத்தின் எதிரில் உள்ள பறக்கும் ரெயில் தண்டவாள பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சி நடக்கும்போது பறக்கும் ரெயிலும் நிறுத்தப்பட்டது.

முக்கிய சாலைகளில் இதனால் போக்குவரத்து நெரிசல் மிகக் கடுமையாக இருந்தது. குறிப்பாக நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களில் அண்ணா சாலையின் ஒரு பக்கம் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.

அதிகபட்ச வசுல் செய்தபடங்கள் 10 கோடிக்குமேல்

1.அயன்
2.ஆதவன்
3.பேராண்மை
4.படிக்காதவன்
5.கந்தசாமி
6.நாடோடிகள்
7.வேட்டைக்கரன்
8.வில்லு
9.உன்னைப்போல் ஒருவன்


5 - 10 கோடிவரை வசுல் செய்தபடங்கள்
1.வெண்ணிலா கபடிகுழு
2.சிவாமனசுல சக்தி
3.தோரானை
4.மாசிலாமணி
5.நினைத்தாலே இனைக்கும்


2009ல் வெளியான 131 படங்களில் தயாரிப்பாளர்கள் சுமார் 510 கோடி முத்லீடு செய்திருக்கிறார்கள். ஆனால் போட்ட முதல் திரும்பவராமல் நஷ்டத்தை சந்தித்தபடங்கள் எண்ணிக்கை எராளம். அசலை நெருங்கிய படங்கள் 10. அசலையும் தாண்டி லாபத்தை கொடுத்தபடங்கள் 5. வருட்ந்தோறும் தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் நஷ்டத்தை சந்திப்பது வருட நேர்த்திக்கடன் சடங்காகி விட்டது. தன் படத்தால் நஷ்டம் என தெரிந்தும் நடிகர்கள் ஒவ்வொருபடத்திற்கும் சம்பளத்தை உயர்த்துவதை கட்டுப்படுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் எந்தவித முயற்சியிலும் ஈடுபடாத கவலைக்குரிய விஷயம். தயாரிப்பாளர்களிடம் நிலவுவரும் ஒற்றுமையின்மை, போட்டி மனப்பான்மை, ஒரே படத்தில் கோடீஸ்வரளாகி விட வேண்டும் என்கிற பேராசை பெரிய நடிகர்கள் தங்கள் சம்பளத்தை உயர்த்துவதை காரணமாகிவிடுகிறது.

பட அதிபராக - புகழ்வெளிச்ச ஆசையில் படமெடுக்க வரும் புதியவர்களே எந்த திரைப்படதுறை அடிப்படை அறிவும் இன்றி புதுமுகங்கள் நடிக்கும் படத்தை எடுத்து நஷ்டமடையும் 70% , தயாரிப்பாளர்கள் கோடம்பாக்கத்திற்கு வருட்ந்தோறும் புதியவர்களாகவே இருப்பது வாடிக்கையான சமாச்சாரம். தொடரும் நஷ்டம், தொலைக்காட்சி நிறுவனங்களின் ஆதிக்கத்தால் சீரழிந்து சின்னபின்னமாகி வரும் சிறுபட தயாரிப்பாளர்கள், இவற்றுக்கெல்லாம் என்னதான் தீர்வு வரும் நாட்களில் விரிவான கட்டுரைகளில்
காண்போம்.

இந்தியில் தாறுமாறாக ஹிட் ஆகியிருக்கும் த்ரி இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் கூட விரும்புகிறார்கள். இந்த பரபரப்பான நேரத்தில் படக்கென்று ரீமேக் ரைட்சை அமுக்கியிருக்கிறது ஜெமினி லேப் நிறுவனம். (சமீபத்தில் வந்த குட்டி இவர்கள் படம்தான்) மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடிக்க முதலில் யாரை அணுகுவது? பளிச்சென்று நினைவுக்கு வந்தவர் விஜய்தான். அவரும் மனப்பூர்வமாக சம்மதித்திருக்கிறாராம். இதற்கிடையில் படத்தில் நடிக்கும் மேலும் இரு ஹீரோக்களை பிக்ஸ் பண்ணும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம்.



விஜய் நடித்தால் உதயநிதி ஸ்டாலினை இன்னொரு ஹீரோவாக அறிமுகப்படுத்தலாமே என்று நினைக்கிறதாம் இந்த நிறுவனம். கடந்த சில மாதங்களாக தனது அறிமுகத்திற்காக கதை கேட்டுக் கொண்டிருக்கும் உதயநிதி என்ன பதில் சொன்னாரோ? "அவரை சம்மதிக்க வைக்கிற வேலைய எங்கிட்ட விடுங்க" என்று தைரியம் கொடுத்திருக்கிறாராம் விஜய்.

விஜய், உதயநிதி என்று அந்தஸ்து உயர்கிறதே, த்ரி இடியட்ஸ் என்றா பெயர் வைப்பார்கள்? அப்படி வைத்தால் ரசிகர்கள் ஒப்புக் கொள்வார்களா? இப்படி நிறைய கேள்விகள். அதற்கெல்லாம் உடனுக்குடன் பதில் சொல்லவா போகிறார்கள்?

விஜய் தனது 50வது படமான சுறாவில் நடித்து வருகிறார். அடுத்து அவர் யார் இயக்கத்தில் நடிக்கிறார்? சித்திக் அல்லது ஜெயம் ராஜா?

விஜய்யை நான் இயக்குவது முடிவு செய்யப்பட்ட விஷயம். அது அவரது 51வது படமா இல்லை 52வது படமா என்பதெல்லாம் எனக்கு‌த் தெ‌ரியாது என்று கூறியிருந்தார் ஜெயம் ராஜா. சித்திக் தனது பாடிகார்ட் படத்தை விஜய்யை வைத்து ‌‌ரீமேக் செய்ய அவசரம் காட்டுவதால் எழுந்த குழப்பம் இது.

இந்நிலையில் விஜய்யின் 51வது படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் தயா‌ரிக்கிறது, ஜெயம் ராஜா இயக்குகிறார் என ஆஸ்கர் பிலிம்ஸ் தரப்பில் அதிகார‌ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் விஜய்யின் 51வது படம் குறித்த குழப்பத்துக்கு தற்காலிகமாக முடிவு ஏற்பட்டுள்ளது.