Showing posts with label Tamil Cinema. Show all posts
Showing posts with label Tamil Cinema. Show all posts

கோடை விடுமுறையை குறிவைத்து படங்கள் வெளியாவது ஒவ்வொரு வருடமும் சகஜம்தான். ஆனால் இந்த கோடை சம்திங் ஸ்பெஷல். விஜய், சூர்யா என பெ‌ரிய நடிகர்களால் களைகட்டியிருக்கிறது.

ஏப்ரல் 2ஆம் தேதி லிங்குசாமியின் பையா வெளியாகிறது. கிளவுட் நைன் இந்தப் படத்தை விநியோகிப்பதால் கலைஞர் தொலைக்காட்சி நிமிடத்துக்கொரு விளம்பரம் செய்து படத்தை பிரமாண்டப்படுத்தி வருகிறது.

இதையடுத்து 9ஆம் தேதி சிம்புதேவனின் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் திரைக்கு வருகிறது. 28 வருடங்களுக்குப் பிறகு தமிழில் உருவாகியிருக்கும் கௌபாய் படம் என்பதால் ஒருமுறை பார்த்து வைப்போம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள் தமிழ் மக்கள்.




ஏப்ரல் 14ஆம் தேதி அருண் விஜய்யின் மாஞ்சா வேலு, விஜய்யின் சுறா, சூர்யாவின் சிங்கம் என பல படங்கள் வெளியாக உள்ளன. இதில் சுறாவின் வெளியீடு ஏப்ரல் இறுதிக்கு தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது. திரையரங்கு கிடைப்பதைப் பொறுத்து மற்ற படங்களின் ‌ரிலீஸ் தேதியும் மாறக்கூடும்.

இந்தப் படங்கள் தவிர சுந்தர் சி.யின் குரு சிஷ்யன், மினிமம் பட்ஜெட் சைதை செல்லா, ஷhமின் அகம் புறம் என பல படங்கள் ஏப்ரலை எதிர்நோக்கியுள்ளன.

படங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் குழாயடி நெருக்கமே நினைவு வருகிறது.

சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற ரெட்டைச்சுழி படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்டு ஆடியோ சிடியை வெளியிட்ட ஐஸ்வர்யா ராயின் புகழ்பாடி வருகிறார்கள் மீடியா புகைப்படகாரர்களும், வீடியோ கிராபர்களும். காரணம், விழாவில் நூற்றுக்கணக்கான காமிராக்களின் ப்ளாஷ் வெளிச்சம் தன் மீது பட்டபோதெல்லாம் விழாவில் கலந்து கொண்ட இரண்டரை மணி நேரமும் மேடையில் வீற்றிருந்தபடியே ஒவ்வொரு புகைப்பட கலைஞருக்கும் ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கி விதவிதமான முகபாவனைகள் செய்து, ஒவ்வொரு கேமராமேனுக்கும் ஸ்பெஷல் ‌போஸ் கொடுத்த ஐஸ்வர்யாவின் அடக்கமும், அன்பும்தான்!

அதேமாதிரி விழா தொடங்குவதற்கு சற்று முன் ரெட்டைச்சுழி பாடல்கள் ஸ்கிரீனிங் செய்யப்பட்டபோது வந்த ஐஸ்வர்யாவுக்கும், அவரது அம்மாவுக்கும் பின் வரிசையில் முறையாக விஐபிகளுடன் சீட் ஒதுக்கப்படாத போதும் முன் வரிசையில் மேடைக்கு அருகில் பேனரை தள்ளி ஒதுக்கித் தரப்பட்ட சீட்டில் பவ்யமாக அமர்ந்து பாடல் காட்சிகள் மற்றும் ட்ரைலரை பார்த்து ரசித்ததிலும் ஐஸின் பெருந்தன்மை மிளிர்ந்தது. அழகியிடம் நம்மூர் அக்கடா... துக்கடா... நடிகைகளும் பாடம் படித்தால் சரி!

நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த செய்தி வந்ததும் சினிமா பிரலபலங்கள், ரசிகர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். அவர்களிடம் கவுண்டமணியின் மனைவி, ‘’அவருக்கு நெஞ்சு வலி வந்ததாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. கழுத்து எலும்பு தேய்மானம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இப்போது சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் உள்ளார். ஒன்றும் பிரச்சனையில்லை’’என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று திடீர் மாரடைப்பால் கவுண்டமணி இறந்துவிட்டார் என்று செய்திகள் வந்தன.

இந்த செய்தி குறித்து மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் கவுண்டமணி, ‘’வேறொன்னுமில்ல... கழுத்து வலின்னு ஆஸ்பத்திரிக்கு போனேன். வலி ரொம்ப தாங்கல. தங்கியிருந்த பாத்துட்டு போகலாம்னு இங்கேயே இருந்துட்டேன்.

இது குத்தமாய்யா... நெஞ்சு வலி, சீரியஸ்னு கதைய முடிக்க பாக்குறாங்களே... ’’என்று நொந்துகொண்டிருக்கிறார்.


கவுண்டமணி மருத்துவமனையிலிருந்து இன்னும் வீடு திரும்பவில்லை. ஆனால், ஒவ்வொரு வியாழனன்றும் ஈசிஆர் சாலையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு செல்கிற வழக்கம் உள்ளவர் அவர்.

இந்த வியாழக்கிழமையும் கோயிலுக்கு போக வேண்டும் என்பதால், ’’கோயிலிக்கு போயிட்டு வந்துடறேனே..’’என்று மருத்துவர்களிடம் கேட்டிருக்கிறாராம்.

கவுண்டமணி மரணம் என்பது வெறும் வதந்திதான்.

உலக அழகி ஐஸ்வர்யாராய் சென்னைக்கு வருவது இது முதல் முறையல்ல. ஆனால் இதே சென்னையில் ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை! இடம் சத்யம் திரையரங்கம் படம்- ரெட்டச்சுழி.


மீடியாக்களின் தள்ளுமுள்ளு, பார்வையாளர்களின் பாய்ச்சல் இவற்றுக்கு நடுவிலும் தனது மாறாத புன்னகையோடு விழாவை கவுரவித்தார் ஐஸ்வர்யாராய். வேதனை என்னவென்றால் அரங்கத்திற்குள் நுழைந்தவரை அமர வைக்க ஒரு நாற்காலி கூட காலியாக இல்லை. வந்திருந்த மொத்த கூட்டமும் அவரை பார்க்கதான் வந்திருந்தது. ஆனால் அவருக்காக ஒரு நாற்காலியை காலி செய்து தருகிற மனசு முன்வரிசை புண்ணியவான்களுக்கு இல்லவே இல்லை. சிறிது நேரம் காத்திருந்த ஐஸ்சுக்கு நல்ல வேளையாக சேர் ஒன்று காலி செய்து தரப்பட்டது. (படம் ஓடும் நாட்களில் இந்த சேரில் அமர பத்து ரூபாய் டிக்கெட் வாங்கினால் போதுமானது)

ஒருவழியாக மேடையேறிய ஐஸ்வர்யாராய் பாரதிராஜா, பாலசந்தர் போன்ற ஜாம்பவான்கள் பேசிவிட்டு வரும்போது எழுந்து நின்று வணங்கியது வியப்போ வியப்பு. விழாவில் பேசிய அத்தனை பேரும் அவரது அழகை வர்ணிக்க தவறவில்லை. ஷங்கரின் பேச்சில் ததும்பி வழிந்தது நன்றி. ஜீன்ஸ் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கே அவங்க வரல. ஆனா இந்த படத்தை பற்றியும் இது எந்த மாதிரி படம் என்பது பற்றியும் அவங்களுக்கு சொன்னோம். அதன்பின் வர சம்மதிச்சாங்க. அவங்க உலக அழகியா இருந்தாலும், தனது தொழிலில் அர்பணிப்புள்ள ஒரு அற்புதமான நடிகை. எந்திரன் படப்பிடிப்புக்காக சவுத் ஆப்பிரிக்காவில் உள்ள மாச்சி பூச்சி என்ற இடத்துக்கு போயிருந்தோம்.

பல மணிநேர பயணம். பாதைகளும் சீரா இல்லை. எல்லாரும் டயர்டா ஆயிட்டோம். ஒருவழியா நாங்க போய் சேர்ந்த இடத்துக்கு அப்புறமா வந்து சேர்ந்தாங்க ஐஸ்வர்யா. அந்த இடத்தோட அழகை பார்த்திட்டு 'சினிமாவில் இருக்கறதாலதானே இப்படிப்பட்ட இடத்தையெல்லாம் பார்க்க முடியுது' என்று சந்தோஷப்பட்டாங்க. இங்கிருக்கிற கொசுவை விட பல மடங்கு விஷமுள்ள பூச்சிகள் அங்க இருந்தது. அது கடிச்சா அந்த இடத்தில தழும்பு மறையவே சில வாரங்கள் ஆகும். அதையெல்லாம் பொறுத்துக்கிட்டு நடிச்சு கொடுத்தாங்க என்றார்.

இதே விழாவில் பேசிய பாலசந்தர் கூட ஐஸ்வர்யாவின் அழகை கண்டு தடுமாறினார். டிரெய்லர் பார்க்கலாம்னு சந்தோஷத்தோட வந்தேன். ஐஸ்வர்யாராய்க்கு பக்கத்து சீட்டை எனக்கு கொடுத்து சந்தோஷத்தை இரட்டிப்பாக்கிட்டாங்க. இந்த கிழவனுக்கு ஏன் இந்த ஆசைன்னு நினைக்காதீங்க. அழகை ஆராதிக்கலாம். தப்பில்ல. ஆராதிக்கறதோட விட்டுறணும் என்றார்.

நடிகர் கவுண்டமணிக்கு நெஞ்சு வலி என்று வந்த செய்திகளில் உண்மையில்லை என்றும் அவர் நலமுடன் உள்ளதாகவும் அவர் மனைவி கூறியுள்ளார்.

'காமெடி கிங்' எனப் புகழப்படும் நடிகர் கவுண்டமணிக்கு திடீ‌ரென ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏராளமான ரசிகர்கள், செய்தியாளர்கள் மற்றும் திரையுலகினர் திகைத்துப் போய் அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தனர்.

விசாரித்ததில், அவரது கழுத்துப் பட்டை தேய்ந்து வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு வந்ததாகவும், மற்றபடி நலமுடன் இருப்பதாகத் தெரியவந்தது.

இதுகுறித்து அவரது மனைவி கூறுகையில், "அவருக்கு நெஞ்சு வலி வந்ததாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. கழுத்து எலும்பு தேய்மானம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இப்போது சிகிச்சைக்குப் பிறகு நலமுடன் உள்ளார். ஒன்றும் பிரச்சனையில்லை.." என்றார்.

பொதுவாக நிகழ்ச்சிகளில் கூட தலை காட்டுவதை விரும்பாதவர் கவுண்டமணி. பத்திரிகையாளர்களிடம் நல்ல முறையில் பழகினாலும், தனது பேட்டியோ, செய்தியோ வரவேண்டாம் என்பார்.

ஆனால் சமீப காலமாகத்தான் திரையுலகம் தொடர்பான விழாக்களில் பங்கேற்கிறார். சமீபத்தில் முதல்வருக்கு ஃபெப்ஸி நடத்திய பாராட்டு விழாவில் பங்கேற்று தொடர்ச்சியாக காமெடி செய்து கலக்கினார் கவுண்டர். இவர் நடிப்புக்காக மட்டுமே சரத்குமாரின் ஜக்குபாய் பார்த்தவர்களே அதிகம்.

தமிழர்கள் கையில் தமிழ் சினிமா இருக்க வேண்டும் என்று பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். எஸ்.ஆர்.எம் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் முழுக்க முழுக்க புதியவர்களை வைத்து 'சைதை செல்லா' என்ற படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை தென்னிந்திய வர்த்தக சபையில் வெளியிடப்பட்டது. பெப்சி தலைவர் வி.சி.குகுநாதன் முதல் சி.டி.,யை வெளியிட, நடிகர் ஆர்.கே., பெற்றுக்கொண்டார்.

அப்போது பேசிய வி.சி.குகநாதன், "இந்த படத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இதுவரை திரையுலகிற்கு வராமல் ஒதுங்கி இருந்திருக்கிறார்கள் இவர்களைப் போன்றவர்கள் இன்னும் அதிகமாக வரவேண்டும். அப்போதுதான் நம் தமிழ் சினிமா தமிழர்களின் கையில் இருக்கும். மேலும் இப்படத்தின் பாடல்களை பார்த்தபோது இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.

சீத்தாபதி இயக்கும் இப்படத்திற்கு ஜான் பீட்டர் இசையமைக்க, நீலமேகன் பாடல்களை எழுதியுள்ளார். நாயகனாக விஜய் ஆனந்த் அறிமுகமாகிறார். மிதுனா நாயகியாக நடிக்க, சீதா, பொன்னம்பலம், மயில்சாமி, மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கும் 'சைதை செல்லா' படத்தை எஸ்.ஆர்.முகேஷ், தயாரிப்பதோடு இப்படத்தில் காவல்துரை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து நடிகராகவும் அறிமுகமாகிறார்.