அசல் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. நகரத்தில் படம் வசூலித்ததைவிட பி அண்டு சி சென்டரில் வசூல் மிகக் குறைவு என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். நஷ்டமடைந்தவர்கள் பிரபுவிடம் வைத்திருக்கும் டிமாண்ட், இன்னொரு படத்தை எங்களுக்கு தாருங்கள்.
அஜித்தின் கவனத்துக்கும் இந்த டிமாண்ட் சென்றிருக்கிறது. தன்னால் எந்த தயாரிப்பாளரும் பாதிக்கப்படக் கூடாது என்று நினைப்பவர் அஜித். அதனால் சிவாஜி பிலிம்ஸுக்கு மீண்டும் கால்ஷீட் கொடுக்க முன் வந்துள்ளாராம்.
படத்தை யார் இயக்குவது? படத்தின் கதை என்ன? என்பதெல்லாம் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் அறிவிப்பு வரலாம்.
சட்டசபை திறப்பு விழா: ரஜினி, கமல் வரவில்லை -விஜய், அஜீத் ஆஜராகியிருந்தனர்.
Posted by Pirem | 9:42 PM | Ajith, Kamal, Rajini, Vijay | 0 comments »
சென்னையில் தமிழக அரசின் புதிய சட்டப்பேரவை வளாகம் மற்றும் தலைமைச் செயலக கட்டடம் திறப்பு விழா, மிகவும் கோலாகலமாகவும் கண்ணியமான முறையிலும் நடந்தது.
தமிழக புதிய சட்டசபை - தலைமை செயலக கட்டிடம், சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளது.
முதல்வர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில், சட்டமன்றம், தலைமை செயலகம் என இரு பிரிவுகளாக இந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதில், சட்டமன்ற வளாகம் பசுமை கட்டிடமாக அமைக்கப்பட்டு உள்ளது.
ரூ.450 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சட்டசபை மற்றும் தலைமை செயலக கட்டிட வளாக திறப்பு விழா, சட்டமன்ற வளாகம் அமைந்துள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நேற்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.
பிரமாண்ட பந்தல்
திறப்பு விழாவையொட்டி, 8 ஆயிரம் பேர் அமரும் வகையில் பெரிய பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தனி விமானம் மூலம் சென்னை வந்தனர்.
கருணாநிதி நேரில் போய் வரவேற்பு
இந்த விழாவின் ஒவ்வொரு அசைவையும் முதல்வர் கருணாநிதியே தீர்மானித்தார். அதிகாலை 5 மணிக்கே திறப்பு விழா அரங்குக்கு வந்தவர் ஒவ்வொரு விஷயத்தையும் அருகிலிருந்து சொல்லிச் சொல்லி செய்ய வைத்தார்.
பிற்பகலில் மன்மோகன் சிங்கும் சோனியாவும் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இறங்கியதும் அவர்களை தானே முன்னின்று வரவேற்றார் முதல்வர். பூங்கொத்து அளித்து சால்வை போர்த்தி மரியாதையும் செய்தார்.
காங்கிரஸ் தலைவரை வரவேற்ற பாஜக முதல்வர்
விமான நிலையத்தில் சோனியா காந்தி வந்ததும் அவரை முதல்வர் கருணாநிதி, ஆந்திர முதல்வர் ரோஸய்யா ஆகியோருடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் வரவேற்றது வித்தியாசமாகவும் அரசியல் பண்புக்கு இலக்கணமாகவும் அமைந்தது.
எடியூரப்பா பாஜக ஆளும் மாநில முதல்வர், எதிர்கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும், காங்கிரஸ் தலைவர் சோனியாவை வரவேற்க ஆர்வத்தோடு முன்வந்தார். சோனியாவும் மகிழ்வுடன் அவருக்கு வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்தார்.
தமிழகமும் ஆந்திரமும் இணைந்தே இருந்தன! - ரோஸய்யா
விமான நிலையத்தில் ஆந்திர முதல்வர் ரோஸய்யாவுடன் இந்த விழா குறித்து கேள்வி கேட்டனர் நிருபர்கள். அதற்கு அவர், "நாங்கள் அண்ணன் தம்பிகள். இதற்கு முன் மெட்ராஸ் மாகாணமாக தமிழகமும் ஆந்திரமும் இணைந்தே இருந்தன. இப்போது எல்லைகள் பிரிந்திருந்தாலும் இணக்கமாக இணைந்தே செயல்படுகின்றன. இது தொடரும்" என்றார்
வீல்சேருக்கு விடை கொடுத்தார்
நேற்றைய விழாவில் இன்னொரு சிறப்பு, முதல்வர் வீல்சேர் இல்லாமலே திறப்பு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுதான். மன்மோகன் சிங் ரிப்பன் வெட்டிய போதும் சரி, பின்னர் அவர்களை பேட்டரி காரில் அழைத்துச் சென்ற போதும் சரி, தனது வயது மற்றும் உடல்நிலையை மீறிய உற்சாகத்துடன் அவர் காணப்பட்டார்.
விழா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் குறித்த அறிவிப்பு ஒலித்த போது, தன்னிச்சையாக அவர் எழுந்து நிற்க முயன்றது, பார்வையாளர்களையும் சோனியாவையும் கண்கலங்க வைப்பதாக இருந்தது.
மேடையில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி பொன்னாடை அணிவித்தார். மன்மோகன்சிங், தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பொன்னாடையை பெற்றுக்கொண்டார். கருணாநிதிக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் பொன்னாடை அணிவித்தார்.
ரஜினி - கமல் ஆப்ஸென்ட்!
இந்த விழாவில் கட்டாயம் எதிர்பார்க்கப்பட்ட கலைத்துறை பிரமுகர்கள் ரஜினி யும் கமலும் கடைசி வரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீப கால விழா சர்ச்சைகள் காரணமாக இருவரும் இந்த விழாவை தவிர்த்திருக்கக் கூடும் என்று கூறப்பட்டது.
ஆனால் இளம் நடிகர்களில் விஜய்யும் அஜீத்தும் தவறாமல் ஆஜராகியிருந்தனர். நடிகர்கள் பெரும்பாலும் ஆஜராகிவிட்டிருந்தனர். சினிமாக்காரர்களுக்கென்று தனி பகுதியே ஒதுக்கியிருந்தார் முதல்வர்.
ரூ 24 கோடியில் பெரும் பாதுகாப்பு .. போக்குவரத்து ஸ்தம்பிப்பு
இந்த விழாவுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அண்ணா சாலை முழுக்க 5000 போலீசார் குவிக்கப்பட்டனர்.
பிரதமர் அண்ணாசாலையில் வரும்போது மாலை 4 மணிக்கு மேல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போலீசார் முன்கூட்டியே போக்குவரத்து நிறுத்தம் பற்றி அறிவிப்பு வெளியிட்டனர்.
அண்ணாசாலையே பலத்த பாதுகாப்பு அரணோடு காணப்பட்டது. ஒவ்வொரு சிக்னல் சந்திப்பிலும் 2 உதவி கமிஷனர்கள் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அண்ணாசாலையில் வழிநெடுக உள்ள அனைத்து உயரமான கட்டிடங்களிலும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
நிகழ்ச்சி நடந்த சட்டசபை வளாகத்தை சுற்றிலும் 2,500 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அந்த பகுதியில் உள்ள கடைகளும் பாதுகாப்பு கருதி அடைக்கப்பட்டிருந்தன.
புதிய சட்டசபை வளாகத்தின் எதிரில் உள்ள பறக்கும் ரெயில் தண்டவாள பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சி நடக்கும்போது பறக்கும் ரெயிலும் நிறுத்தப்பட்டது.
முக்கிய சாலைகளில் இதனால் போக்குவரத்து நெரிசல் மிகக் கடுமையாக இருந்தது. குறிப்பாக நிகழ்ச்சி முடிந்த சில நிமிடங்களில் அண்ணா சாலையின் ஒரு பக்கம் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.
நடிகர் அஜீத்துக்கு கார் பந்தயத்தில் கலந்துகொண்டு சாதிக்க வேண்டும் என்பது நீண்டகால லட்சியமாக இருந்தது. அதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டு கார்பந்தயங்களில் கலந்துகொண்டார்.
இடையில் சிலர் அட்வைஸ் செய்ததால் பந்தயங்களில் கலந்துகொள்வதை கைவிட்டு முழு கவனத்தை சினிமாவில் செலுத்தினார்.
ஆனால், சில படங்களுக்குப் பிறகு மீண்டும் கார் பந்தய ஆசை வந்துவிட்டது. தற்போது ஐரோப்பா நாடுகளில் நடக்கவிருக்கும் ஃபார்முலா-2 பந்தயத்தில் கலந்துகொள்ள தீர்மானித்த அஜித், அதில் கலந்துகொள்ளத் தேவைப்படும் தொகையான 23 கோடி ரூபாயை கொடுத்து உதவும்படி தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்த முதல்வர், தொகை வழங்க ஆலோசித்து வருவதால் ஃபார்முலா-2 வில் கலந்துகொள்வது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
அஜீத் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஐகோர்ட்டில் ஜாக்குவார் தங்கம் வழக்கு
Posted by Pirem | 9:56 AM | Ajith | 0 comments »
தனது வீடு மீது தாக்குதல் நடந்தியது தொடர்பாக நடிகர் அஜீத் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடுமாறு சென்னை ஐகோர்ட்டில் ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரபல சினிமா ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்காக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த மாதம் 6ந் தேதி திரை உலகினர் முதல்வர் கருணாநிதிக்கு நடத்திய பாராட்டு விழாவில் நடிகர் அஜீத் சில கருத்துக்களை வெளியிட்டார். இது தொடர்பாக நான் என் கருத்துக்களை கூறி இருந்தேன்.
இதனால் அஜீத் தூண்டுதலின் பேரில் அவரது ரசிகர்கள் 15க்கும் மேற்பட்டோர் கடந்த 18ந் தேதி எம்.ஜி.ஆர். நகரில் உள்ள எனது வீட்டில் தாக்குதல் நடத்தினார்கள். என் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் நொறுக்கப்பட்டன. என் மனைவியையும் தாக்கி காயம் ஏற்படுத்தினார்கள். என் மகனை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.
இது தொடர்பாக நான் எம்.ஜி.ஆர். நகர் போலீசில் அஜீத் மற்றும் தாக்குதல் நடத்திய அவரது ரசிகர்கள் மீது புகார் கொடுத்தேன். அவர்கள் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இதுவரை எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அஜீத்திடம் பண பலம் மற்றும் படை பலம் காரணமாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் மற்றும் எம்.ஜி.ஆர்.நகர் இன்ஸ்பெக்டர் ஆகியோரை சந்தித்து முறையிட்டேன். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே அஜீத் மீதும் மற்றவர்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூற இருந்தார்.
நீதிபதி ரகுபதி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஜாக்குவார் தங்கம் சார்பில் வக்கீல் சிவக்குமார் ஆஜர் ஆனார்.
அரசு தரப்பில் வக்கீல் இளங்கோ ஆஜரானார். அவர் இது தொடர்பாக அரசு தரப்பில் பதில் அளிக்க அவகாசம் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து நீதிபதி 2 வார காலத்துக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.
அசலுக்குப் பிறகு அஜீத் நடிக்கும் படத்தைத் தயாரிக்கப்போகிறார் தயாநிதி அழகிரி. இந்தப் படத்தை இயக்ககிறார் கௌதம்மேனன்.
இந்தப் படத்தின் கதை ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரை மையப்படுத்தியதாகும்.
தல ரசிகர்களுக்கு இது சோகமான செய்திதான். இந்த வருடம் அவர்கள் அசல் படத்துடன் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
திரையுலகில் அஜீத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி பனிபோல் விலகிவிட்டது. அவர் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி கிளவுட் நைன் தயாரிப்பில் கௌதம் இயக்கும் துப்பறியும் ஆனந்த் படத்தில் நடிக்க எந்தத் தடையும் இல்லை. ஸ்கிரிப்டும் தயார். ஆனால், படம் தொடங்கப்படுமா என்பது சந்தேகம்.
ஏற்கனவே கூறியபடி கார் ரேஸில் கலந்து கொள்ளப் போகிறாராம் அஜீத். இதற்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ரேஸ் எல்லாம் முடித்து அக்டோபரில் படத்தை தொடங்கலாம் என்பது அவரது பிளான்.
அஜீத்தின் முதல் மரியாதை ரேஸுக்கா, சினிமாவுக்கா என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்துவிடும்.
அஜீத்-முதல்வர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன? பலரது மனதையும் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது இப்போது. அஜீத் பேசியது திரையுலக விஷயங்கள் மட்டுமல்ல, தனது கனவுகளில் ஒன்றான கார் ரேஸ் பற்றியும்தானாம். கிட்டதட்ட நாற்பது நிமிடங்கள் நடந்த அந்த சந்திப்பில் அஜீத் பெரிதாக ஒரு விஷயத்தை சாதித்துவிட்டு வந்திருக்கிறார். அது என்ன?
இங்கிலாந்தில் நடந்த பார்முலா 3 கார் ரேசில் கலந்து கொண்டு ஆறாவது இடத்தை அடைந்தவர் அஜீத். பார்முலா 2 ரேசுக்கு முன்னேற வேண்டும் என்பதுதான் அவரது லட்சியம்.
"இந்தியாவில் கார் பந்தயங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதை வெறும் விளையாட்டாக பார்க்காமல் வியாபாரமாகவும் கருத வேண்டும். பெரிய நிறுவனங்கள் கிரிக்கெட்டுக்கு மட்டுமே அதிக ஊக்கம் தருவதை விட்டுவிட்டு கார் பந்தயங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்".
"இந்த பந்தயம் என்னவோ பெரும் பணக்காரர்களின் விளையாட்டு என்று கருதப்படுகிறது. அது உண்மையல்ல என்பதை நிரூபிக்கவே நானும் கூட இதில் ஈடுபடுகிறேன். இந்த விளையாட்டை நம் நாட்டில் பிரபலப்படுத்த வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கம் தருவதை போல இந்த விளையாட்டுக்கும் ஊக்கம் தர வேண்டும்" என்று முன்பு ரேஸ்களில் கலந்து கொள்ளும் போது கூறி வந்தார் அஜீத்.
முதல்வரை சந்தித்தபோதும் இது குறித்துதான் பேசினாராம் அஜீத், "ஃபார்முலா 2 கார் ரேசுக்கு அரசே நிதி ஒதுக்கி ஸ்பான்சர் செய்யணும். இதுக்கு 23 கோடி ரூபாய் ஆகும். அதை நீங்க எங்களுக்கு செஞ்சு தரணும்" என்று வேண்டுகோள் வைத்தாராம். தகுதியான நான்கு வீரர்களின் பயோ டேட்டாக்களையும் கொடுத்திருக்கிறார். இவர்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்பதுதான் அவரது வேண்டுகோள். இதுபற்றியெல்லாம் ஆர்வமாகவும் விளக்கமாகவும் கேட்டுக் கொண்ட முதல்வர், உடனடியாக பாஸிட்டிவான பதிலும் கொடுத்தாராம்.
கலைஞரின் நாடகம் முடிவுக்கு வந்தது....! ரஜினி, அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்தது: பெப்சி தலைவர் அறிவிப்பு
Posted by Pirem | 3:20 AM | Ajith, Rajini | 0 comments »
திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், பல்வேறு விழாக்களில் பங்கேற்க வேண்டுமென நடிகர் நடிகையர் மிரட்டப்படுகிறார்கள் என நடிகர் அஜீத் வெளிப்படையாகத் தெரிவித்தார். இதற்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
ரஜினி, அஜீத்தை பெப்சி, திரைப்பட விநியோகஸ்தர் சங்கங்கள் கண்டித்தன. திரைப்பட கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தியும், ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் முதல்வர் கருணாநிதி, திரையுலகினர் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்றும் கலை உலகில் யாரும் கலகம் விளை வித்திட முடியாது என்றும் அறிக்கை வெளியிட்டார்.
முதல்வர் கருணாநிதி வேண்டுகோளை ஏற்று திரைப்பட சங்கத்தினர் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதாகவும் போராட்டங்கள் அனைத்தும் கைவிடப்படுவதாகவும் பெப்சி தலைவர் வி.சி. குகநாதன் இன்று அறிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
எங்கள் கலை உலகத்தின் பிதாமகன் கலைஞர். அவர் கேட்டுக்கொண்டபடி கருத்து வேறுபாடுகளை கைவிடுகிறோம். திரையுலகினரை விமர்சித்தவர்களை கண்டித்து இன்று வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்த இருந்தோம். அந்த போராட்டமும் ரத்து செய்யப்படுகிறது. கலை உலகில் உள்ளவர்களுக்குள் உரசல் வரலாம். ஆனால் மற்றவர்கள் அதை ஊதி பெரிதாக்கு வதை ஏற்க மாட்டோம்.
கலைஞர் வேண்டுகோள்படி கலை உலகினர் ஒன்று பட்டு செயல்படுவோம். எங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்தன. ரஜினி, அஜீத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பும் அகன்று விட்டது. ஒரே குடும்பமாக செயல் படுவோம் என்றார்.
நடிகர் அஜித் ஜாக்குவார் தங்கம் மோதல் முதலமைச்சர் கருணாநிதியின் திட்டமிட்ட நாடகம்
Posted by Pirem | 9:01 AM | Ajith, Vijay | 0 comments »
தமிழ் திரை உலகத்தை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்திருக்கும் நடிகர் அஜித்
தமிழகத்தில் ரஜினிக்கு அடுத்தப்படியாக ரசிகர்கள் செல்வாக்குப் பெற்றுள்ள நடிகர் விஜயின் செல்வாக்கை, காங்கிரஸ் மேலிடத்தில் குறைக்கவே அஜித் பேட்டரை முதலமைச்சர் கருணாநிதி கிளப்பிவிட்டுள்ளார் என்ற புது தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரை உலகத்தை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்திருக்கும் நடிகர் அஜித் துணிச்சலாக முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையிலேயே நடிகர்களை கட்டாயப்படுத்தி விழாக்களுக்கு அழைக்காதீர்கள் என்று பேசியதை நாம் அறிவோம்.
இது நடிகர் அஜித்தின் உண்மையான நடிப்பல்ல என்றும் முதலமைச்சர் கருணாநிதயின் ஆசியுடன் நிறைவேறும் திரைமறைவு நாடகம் என்றும் புதிய தகவல்களை திமுவினரே உதிர்த்து வருவது ஆர்ச்சரியத்திற்கு உரியதாக உள்ளது.
அதாவது, திரை உலகில் தேமுதிகவை தொடங்கிய விஜயகாந்த் திமுகவின் பரம எதிரயாக செயல்பட்டு வருகிறார். ரசிகர் செல்வாக்கு மிக்க ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று கூறியவர் அப்படியே அமுங்கி போய்விட்டார்.
இதற்கு அடுத்தப்படியாக ரசிகர்கள் செல்வாக்கை பெற்ற நடிகர் விஜய். இவர் காங்கிரஸ் பக்கம் சாய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தடுக்கவும், தமிழ் சினிமாவில் விஜய் அளவிற்கு ரசிகர்களை பெற்றுள்ள மற்றொரு நடிகர் அஜித் என்பவர் உள்ளார் என்பதை காங்கிரஸ் மேலிடத்திற்கு உணர்த்தி அவர்களை திசைதிருப்பவே கருணாநிதி இப்படியொரு நாடகத்தை அரங்கேற்றி வருவதாக திமுக வட்டாரங்கள் மார்தட்டிக் கொள்கிறது.
அஜீத்துக்கு நண்பன் விஜய்க்கு ரசிகன்: நடிகர் ஜெய்
Posted by Pirem | 8:38 AM | Ajith, Vijay | 0 comments »
பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்தவர் ஜெய். சென்னை 28 படத்தில் பத்து ஹீரோக்களில் ஒருவராக வந்து பின் சுப்பிரமணியபுரம் படத்தில் தன் அபார நடிப்பின் மூலம் தமிழ் திரையில் தன்னை பதிவு செய்தவர் ஜெய்.
வாமனன், கோவா வெற்றி படங்களைத் தொடர்ந்து வித்யாசமான கதையமைப்புள்ள அவள் பெயர் தமிழரசி படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.
இப்படத்தின் நேர்காணலுக்காக சென்றிருந்த நம்மிடம் சில ஸ்வாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
’’விஜய் சாருக்கு தம்பியாக நடித்ததாலோ என்னவோ நான் விஜய்க்கு ரசிகன். வேட்டைக்காரன் முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன்.
ஃபெப்சி கலை விழாவிலும் கூட ’புலி உருமுது’ பாடலுக்கு தான் நடனம் ஆடினேன். விஜய் படம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்னா.... என்றவர்.
திரையுலகில் எனக்கு ரொம்பவும் நெருக்கமானவர் சிம்பு. இருவரும் சேர்ந்தால் ஒரே ஜாலிதான். சினிமாவை பற்றிய நிறையவிஷயங்களை பகிர்ந்துகொள்வோம். உலக சினிமா பற்றி பேசுவோம். நிறைய டெக்னிகலான விஷயங்கள் பற்றியும் விவாதிப்போம்.
இந்த வரிசையில் அஜீத் சாரை நான் சொல்லாமல் இருக்கமுடியாது. சென்னை 28 படம் பார்த்தவுடன்
இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் என் நம்பர் வாங்கி என்னை தொடர்புகொண்டு என் நடிப்பை பாராட்டி பேசினார்.
என் ஒவ்வொரு படத்தையும் அஜீத் கவனித்து வருகிறார். என் வளர்ச்சியில் அவருக்கு ரொம்பவும் அக்கரையுண்டு. என் ஒவ்வொரு படத்துக்கும் தல’யிடம் இருந்து போன் வரும். அவருக்கு நான் என்றென்றும் நன்றி உள்ளவனாகவும் இருப்பேன். அதற்கேற்றார் போல் என் படங்களை தேர்வு செய்து வருகிறேன்’ என்றார்.
நான்கு படங்களுக்கு மேல் நடித்துவிட்டீர்கள் பெயருக்கு முன்னால் பட்டப் பெயர் எப்போ போடப்போரீங்க? என்று கேட்டதற்கு,
’அந்தப் பட்டப் பெயரை இயக்குனர் வெங்கட் பிரபு தேர்வு செய்துள்ளார், அல்டிமேட் ஸ்டாரிலிருந்து அல்டிமேட்’டை உருவி, இளைய தளபதியிலிருந்து தளபதி’யை உருவி இரண்டையும் சேர்த்து அல்டிமேட் தளபதி என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது என்று சொல்லி வாய்விட்டு சிரித்தார்... ( சும்மா கலாய்க்கிராங்க! ஹி... ஹி... )
தலைவணங்காத அஜீத் பாராட்டுக்கும் பெருமிதத்துக்கும் உரியவர்.
Posted by Pirem | 7:41 AM | Ajith | 0 comments »
முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய அஜீத், அரசியல் பிரச்சனைகளில் அரசை முந்திக் கொண்டு சிலர் அவசர முடிவு எடுப்பதாகவும், அத்தகைய கூட்டங்களில் கலந்து கொள்ளச் சொல்லி சிலர் மிரட்டுவதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து முன்பு கற்பழிப்பு புகாரில் சிக்கிய ஸ்டண்ட் நடிகர் ஒருவர் அஜீத் தமிழின விரோதி என்று பத்திரிகையில் பேட்டி கொடுத்தார். இதற்கு அஜீத்திடம் இருந்து எந்த பதிலிலும் கிடைக்கவில்லை.
ஓரிரு நாட்கள் கழிந்த நிலையில் எனது காரை அஜீத்தின் தூண்டுதலில் உடைத்துவிட்டனர் என்று இந்த கற்பழிப்பு புகழ் ஸ்டண்ட் நடிகர் காவல் துறையில் புகார் செய்தார். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்கையில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் என்பவர் நாங்க மிரட்டுவோம், உன்னால் என்ன செய்ய முடியும் என பகிரங்கமாக விழா ஒன்றில் பேசினார். இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கம் அவருக்கு தனது கண்டனத்தை தெரிவித்தது.
பிரச்சனை பெரிதாகி வருவதைக் கண்ட திரைத்துறையின் அனைத்து சங்கங்களும் கூட்டாக ஆலோசனை நடத்தின. பிறகு கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில் தனது உண்மையற்றப் பேச்சுக்காக அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன. மேலும் அஜீத்துக்கு ஆதரவாகப் பேசியதற்கு அவை ரஜினிக்கு கண்டனமும் தெரிவித்திருந்தன.
மிரட்டுவோம் என்று பகிரங்கமாகப் பேசிய வி.சி.குகநாதன் என்பவரும் இந்த ‘உண்மையற்ற’ கூட்டறிக்கையில் கையெழுத்துப் போட்டிருந்தார்.
இந்த அறிக்கைக்கு அஜீத்திடமிருந்து இன்னும் பதிலில்லை. பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மன்னிப்பு கேட்க முடியாது என்று பேராண்மை பதிலை தெரிவித்திருந்தார் அஜீத். இப்போது நடப்பதைப் பார்த்தால் கேமரா முன்னால் நிற்கவே பிடிக்கவில்லை என்றும் அதில் தெரிவித்துள்ளார். மீண்டும் கார் ரேஸில் கலந்து கொள்ள அவர் ஆர்வமுடன் இருப்பதும் இந்தப் பேட்டியில் தெரிய வந்துள்ளது.
அஜீத் முதல்வர் முன்னால் வைத்த குற்றச்சாற்று, சிலர் மிரட்டுகிறார்கள் என்பது. இது உண்மையற்ற பேச்சு என்று சங்கங்கள் கூறியுள்ளன. வி.சி.குகநாதன் பகிரங்கமாக மிரட்டுவோம் என்று கூறியது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்த பிறகும் அஜீத்தின் பேச்சை சங்கங்கள் உண்மையற்றப் பேச்சு என கூறியிருப்பது கோயபல்ஸை தோற்கடிக்கும் சமாச்சாரம்.
முதல்வரை அஜீத் சந்தித்த பிறகே அவருக்கு எதிரான கருத்துகள் வன்மையாக வெடித்தன. முதல்வரிடம் சலுகைக்காக கையேந்தி நிற்பவர்களை ஒரு கண்ணசைவில் முதல்வரால் கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
சங்கங்களின் சர்வாதிகார போக்குக்கு தலைவணங்காத அஜீத் பாராட்டுக்கும் பெருமிதத்துக்கும் உரியவர்.
ரஜினி, அஜீத் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா: பரபரப்பான விவாதத்துடன் கூடுகிறது நடிகர் சங்க செயற்குழு!
Posted by Pirem | 5:31 AM | Ajith, Rajini | 0 comments »
திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், பல்வேறு விழாக்களில் பங்கேற்க வேண்டுமென நடிகர் நடிகையர் மிரட்டப்படுகிறார்கள் என நடிகர் அஜீத் வெளிப்படையாகத் தெரிவித்தார். இதற்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
இதையடுத்து திரைப்பட சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு இருவர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது. அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு உள்ளது. ரஜினிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அஜீத் வருத்தம் தெரிவிப்பாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
இதற்கிடையில் அஜீத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார்தங்கம் வீடு தாக்கப்பட்டது. தனது வீடு தாக்கப்பட்டதற்கு அஜீத்தின் தூண்டுதலே காரணம் என்று காவல்துறையிடமும், நடிகர் சங்கத்திடமும் ஜாக்குவார்தங்கம் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் வருகிற 27 ந்தேதி தியாகராய நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடக்கிறது. நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் தலைமை வகிக்கிறார். பொதுச்செயலாளர் ராதாரவி, துணைத்தலைவர்கள் விஜயகுமார், மனோரமா, பொருளாளர் வாகை சந்திரசேகர், இணை செயலாளர்கள் அலெக்ஸ், செல்வராஜ், கே.என்.காளை ஆகியோர் பங்கேற்கிறார்கள். கமிட்டி உறுப்பினர்கள் சத்யராஜ், முரளி, எஸ்.வி.சேகர், சூர்யா, மயில்சாமி, சின்னி ஜெயந்த், மும்தாஜ், சத்யபிரியா, நளினி, பாத்திமாபாபு, குயிலி, நம்பிராஜன், பூச்சி முருகன் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டத்தில் ரஜினி, அஜீத் விவகாரம் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது.
அஜீத் விவகாரத்தில் பெப்ஸி கடுமையான முடிவுகளை எடுத்தபோது அஜீத் துக்காக சினிமா உலகில் பரிந்து பேசிய ஒரே நட்சத்திரம் சூப்பர் ஸ்டார்தான்.
ஆனால் அவருக்கும் பெப்ஸி உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் கண்டனம் தெரிவித்துவிட, இன்னொரு நட்சத்திரம் யாரும் எதிர்பாராத வகையில் இதில் தலையிட்டுள்ளார்.
அவர் விஜய் . தொழில் ரீதியாக அஜீத்துக்கு எதிரானவராக விஜய் சித்தரிக்கப்பட்டாலும் திரைக்கு வெளியே இருவரும் நட்பு பாராட்டிக் கொள்வது தொடர்கிறது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை இரு குடும்பத்தினரும் சேர்ந்தே கொண்டாடுகின்றனர்.
அந்த பாசத்தில், விசி குகநாதனைத் தொடர்பு கொண்ட விஜய், "அஜீத் ஒரு திறந்த புத்தகம் மாதிரி. அவர் மனதில் ஒன்றுமில்லை. நினைப்பதை உடனே கொட்டிவிடுவார். அதைப் பெரிதுபடுத்தி அவருக்கு மன உளைச்சல் தர வேண்டாம்..." என்று கேட்டுக் கொண்டாராம்.
மேலும் கடந்த புத்தாண்டு பார்ட்டியின்போது, நடிப்பை சில ஆண்டுகளில் நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் என அஜீத் சொன்னாராம் விஜய்யிடம்.
அதனைக் குறிப்பிட்டுப் பேசிய விஜய், அவர் பீல்டில் இருக்கும் வரை கஷ்டப்படுத்தாமல் இருக்குமாறு கேட்டுக் கொண்டாராம். ஆனால் இதில் கடும் கோபமடைந்த குகநாதன், அவரை யார் நடிக்கச் சொன்னது.. விருப்பமில்லாவிட்டால் போகட்டும் என்ற ரேஞ்சுக்குப் பேசிவிட்டதாக கோலிவுட்டில் பரபரக்கிறார்கள்.
ரொம்பத்தான் கோபமாக இருக்கிறார்கள் போல..!
திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், பல்வேறு விழாக்களில் பங்கேற்க வேண்டுமென நடிகர் நடிகையர் மிரட்டப்படுகிறார்கள் என நடிகர் அஜீத் வெளிப்படையாகத் தெரிவித்தார். இதற்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கமும் கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து அவரது வீடு தாக்கப்பட்டது. பெப்சி தலைவர் வி.சி. குகநாதன், விநியோகஸ்தர் சங்கத்தலைவர் கலைப்புலி சேகரன் ஆகியோர் இருவரையும் கண்டித்தனர்.
இந்நிலையில் திரைப்பட சங்கங்களின் கூட்டு கூட்டம் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் தலைமையில் நடந்தது. இதில் ரஜினி, அஜீத் கருத்துக்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. அஜீத் பேச்சு உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். ரஜினிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நாடார் சமுதாய ஒருங்கிணைப்பும் அஜீத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆனால் அஜீத் ரசிகர்கள், எங்களது தலைவர் அஜீத்தும், அவருடைய ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்று கூறிவருகின்றனர்.
இந்நிலையில் தீர்மானத்தின்படி அஜீத் வருத்தம் தெரிவிப்பாரா? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்பட சங்கம் கூட்டு கூட்டத்தின் முடிவு பற்றி அஜீத் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் ஆதரவாளர்கள் போன்றோருடன் ஆலோசிக்கிறார். விரைவில் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது - தேவைப்பட்டால் நடிப்பை விட்டு விடுகிறேன்: அஜீத்
Posted by Pirem | 6:28 AM | Ajith | 0 comments »
எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் தவறாக எதுவும் பேசவில்லை. தேவைப்பட்டால் நடிப்புத் தொழிலைவிட்டே விலகுகிறேன்... மீண்டும் ரேஸுக்குப் போகிறேன்," என்று அதிரடியாக கூறி விட்டார் நடிகர் அஜீத் குமார்.
முதல்வர் கருணாநிதியை அஜீத் சந்திப்பதற்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு ஒரு சிறப்புப் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது..
"முதல்வருக்கு நடந்த விழா மேடையில் நான் பேசியது எழுதித் தயாரிக்கப்பட்ட பேச்சல்ல. அந்த நேரத்தில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசினேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த பேச்சு அது. அதில் எந்தத் தவறும் இல்லை. உண்மைகளைப் பேசினேன்... என்ன நடந்ததோ, அதைத்தான் சொன்னேன்.
நடிகர்களை, விளையாட்டு வீரர்களை உருவாக்கியது சமூகம்தானே... அவர்களுக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா?
நடிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் மட்டும்தான் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் என்பதே விவாதத்துக்குரிய ஒன்று. ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. ஆனால் அரசியல் என்று வரும்போது, நடிகர்கள் விசேஷ கவனம் பெறுகிறார்கள். பல சமையல்காரர்கள் சேர்ந்து விருந்தைக் கெடுத்த மாதிரி ஆகிவிடுகிறது. என்னைப் பொறுத்தவரை, அரசியல் விவகாரத்தை அரசியல்வாதிகளும் அதற்கான கட்சிகளும் பார்த்துக் கொள்ளட்டும். எனக்கு இந்த அரசியல் முறை மீது நம்பிக்கை உண்டு. நடிகர்களுடன் அரசியல் தலைவர்கள் சுமுகமாக இருந்தாலே போதும்.
ஏன் இங்கு ஒரு நடிகரால் சுதந்திரமாக கருத்து சொல்ல முடிவதில்லை?
இங்கே எல்லா பிரச்சினைகளைப் பற்றி பேசவும், தீர்க்கவும் நடிகர்கள் வேண்டும் என்கிறது ஒரு கூட்டம். அதேநேரம் நடிகனுக்கு சமூகப் பிரச்சினைகளில் என்ன வேலை... அவன் வேலையை மட்டும் பார்க்கட்டும் என்று கேட்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது. இதற்கு இடையில் மாட்டிக் கொண்டு விழிப்பது நாங்கள்தான்.
யாராவது ஒரு நடிகர் பெரிய முயற்சி செய்து அரசியலுக்குள் நுழைந்தால் உடனே அவரைத் தடுக்கப் பார்க்கிறார்கள், தாறுமாறாகத் திட்டுகிறார்கள். ஒரு நடிகன் வாழும் மாநிலத்தின் அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு, அவனை சமூகப் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டும் என்று சொல்லவும் எந்த உரிமையும் இல்லை. இதில் அவனது பிறப்பு, இனம் போன்றவை குறித்த கேள்வி எதற்கு வருகிறது? ஒரு நடிகர் பல லட்சம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிறகும், அந்த மக்கள் அவனது பேச்சைக் கேட்டு பின்னால் வரத் தயாராக உள்ள நிலையிலும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு காட்டுவது என்ன நியாயம்?
பிறப்பு, இனம்தான் பிரச்சினையாக்கப்படுகிறதா இங்கே?
அது இங்கு மட்டுமல்ல... எல்லா இடத்திலும்தான். ஒரு சினிமா ரசிகன் டிக்கெட் வாங்கி படம் பார்க்கச் செல்லும்போது அல்லது கிரிக்கெட் பார்க்க செல்லும்போது, தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பார்க்கும் ரசிகன் என்ன ஜாதி, மதம், நிறம், இனம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அதுதான் கலையின் சிறப்பு. அந்தக் கலைதான் இந்த மொத்த தேசத்தையும் ஒரு கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆனால் திரைக்கு வெளியே அதே கலைக்கு ஜாதி, இன வர்ணம் பூசுகிறார்கள். எந்த நடிகரின் ரசிகர் கூட்டத்தை எடுத்துக் கொண்டாலும், அவர்கள் குறிப்பிட்ட இனம், மொழிக்கு மட்டும் சொந்தக்காரராக இருக்க மாட்டார்கள். விளையாட்டு, சினிமா போன்ற கலையால் மட்டுமே ஒன்றுபட்டிருப்பதைப் பார்க்கலாம்.
நக்சல் இயக்கத்தவராக, மனித வெடிகுண்டு போன்ற பாத்திரங்களில் நடிப்பீர்களா?
கடந்த சில நாட்களாக நடப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மீண்டும் காமிராவுக்கு முன்னால் நிற்கவே பிடிக்கவில்லை. ஒரு நடிகனுக்கு இங்கே படைப்புச் சுதந்திரமே இல்லை. ஒரு நடிகன் திரையில் புகைப்பிடிப்பது போன்ற காட்சியில் நடித்தால் அது இளம் தலைமுறையை பாதிக்கும் என்கிறார்கள். ஆனால் அதே நடிகன் அரசியலுக்குள் நுழைந்து இளம் தலைமுறையை தன்வசப்படுத்த முயற்சித்தால், 'நடிகனுக்கு இங்கே என்ன வேலை?' என்கிறார்கள்.
ஆனால் நீங்கள் 50 வது படம் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளீர்களே...
உண்மைதான். தயாநிதி அழகிரி தயாரிக்கும் படம் இது. கண்டிப்பாக பண்ணணும்தான். ஆனால், எப்போது எனது பிறப்பும், இனம் குறித்த கேள்விகளும் இங்கே எழுந்துவிட்டதோ, இனி நடிக்கணுமா என்றுதான் தோன்றுகிறது. மீண்டும் எனது பார்முலா 2 கார் பந்தயங்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தரவே நான் விரும்புகிறேன்.
பார்முலா 2 பிரிவில் எனது நுழைவு அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஐரோப்பாவில் ஏப்ரல் - அக்டோபர் மாதங்களில் மோட்டார் ரேஸ் நடத்தும் 10 நாடுகளில் 8-ல் என்னால் நிச்சயம் பங்கேற்க முடியும்.
நாட்டின் 10 முன்னணி ரேஸ் வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதில் இந்த மாநிலம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் இருவரும் இப்போது பார்முலா 1 பந்தயங்களில் பங்கேற்பவர்கள். அர்மான் இப்ராகிம், பர்திவா சுரேஷ்வரன், நான், அஸ்வின் சுந்தர் போன்றவர்கள் வேறு பிரிவுகளில் பங்கேற்கும் தகுதி நிலையை அடைந்தவர்கள். பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளோம்.
பைக் ரேஸிலும் நிறைய வீரர்கள் உள்ளார்கள் இங்கு. இதற்கு நல்ல ஸ்பான்ஸர்ஷிப்பும் கிடைக்கிறது. எதிர்காலத்தில் வெளிநாடுகளில் உள்ளது போல, ஸ்ட்ரீட் மோட்டார் ஸ்போர்ட் போட்டிகளை நடத்தவும் திட்டமிருக்கிறது..."
பாசத்தலைவனுக்கு பாராட்டுவிழாவில் அஜித் மனசில் பட்டதை படார் என்று உடைக்க, பற்றிக்கொண்டு எரிகிறது மேட்டர்.
அஜித் ரசிகர்களால் தாக்கப்பட்டதாக ஜாக்குவார்தங்கம் போலீசுக்கு போயுள்ளார். அஜித்திற்காக முதல்வரிடம் பேசியுள்ளார் ரஜினி. அஜித்,ரஜினிக்கு ரெட் என்ற அஸ்திரத்தை ஏவிக்கொண்டிருக்கிறது ஃபெப்சி. கடந்த நான்கு நாட்களாக சூடு கிளப்பிக்கொண்டிருக்கும் பிரச்சனையில் ஏற்பட்டுள்ள இடியாப்ப சிக்கல், ‘தல’க்கு தலைவலியை கொடுத்துள்ளது.
சினிமாவில் போட்டியாளர்களாக இருந்தாலும் வெளியுலகில் நட்பு பாராட்டிக்கொள்கிறார்கள் விஜய்யும் அஜித்தும். இந்நிலையில் அஜித்திடம் பிரச்சனை குறித்து விசாரித்த விஜய், “கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகிடும்” என ஆறுதல் சொன்னாராம் விஜய்.
ரஜினி,அஜீத்தின் உள்நோக்கம் புரிந்துவிட்டது: திருமாவளவன் ஆவேசம்
Posted by Pirem | 7:42 PM | Ajith, Rajini | 0 comments »
சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைப்பட சண்டை இயக்குநர் ஜாக்குவார் தங்கம் அவர்கள் வீட்டின் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதில் ஜாக்குவார் தங்கம் அவர்களின் மனைவி காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரசிகர்கள் என்ற பெயரில் சமூக விரோத வன்முறைக் கும்பல் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் இந்த வன்முறையை நடத்தியுள்ளது.
தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களைப் பாராட்டி நடத்தப்பட்ட விழா ஒன்றில் நடிகர் அஜீத் இத்தகைய விழாவுக்கு வரும்படி சிலர் மிரட்டுகின்றனர் என்று முதல்வர் முன்னிலையிலேயே பேசினார். அவ்வாறு அஜீத் பேசியதற்கு ஜாக்குவார் தங்கம் தம்முடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
இதற்காக அஜீத் ரசிகர்களும் ரஜினி ரசிகர்களும் இந்த வன்முறையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாமல் வன்முறையைக் கையில் எடுத்துள்ள இத்தகையச் சமூக விரோதக் கும்பல் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் காவிரிநீர்ச் சிக்கல், முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல், ஈழத் தமிழர்ச் சிக்கல் உள்ளிட்ட தமிழின பிரச்சனைகளுக்காக திரைப்படத் துறையினர் தன்னியல்பாக வெகுண்டெழுந்து அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டங்களின்போது ஒரு சில நடிகர்களும் நடிகைகளும் தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதும் புறக்கணிப்பதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
தமிழ் மண்ணில், தமிழ் மக்களின் உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் தம்மை வாழ வைக்கும் தமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் அவமதிக்கிறபோது அத்தகைய போக்குள்ளவர்களை கண்டிப்பதும் சுட்டிக் காட்டுவதும் இயல்பானதுதான். அதனை மிரட்டுவதாகச் சொல்லி திசை திருப்புவது மேலும் உணர்வை இழிவுபடுத்துவதாகும்.
நடிகர் அஜீத் போன்றோரின் பேச்சு, தமிழர்களுக்கான போராட்டங்களிலும் விழாக்களிலும் பங்கேற்க விருப்பம் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.
குறிப்பாக, மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், தம்மை மிரட்டி அழைத்தார்கள் என்று சொல்லும் அளவிற்கு நடிகர் அஜீத்தின் போக்கு உள்ளது என்பதையே அறியமுடிகிறது.
விழாவுக்கு நிதி தாருங்கள் என்றா மிரட்டினார்கள். விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பது எப்படி மிரட்டலாக இருக்க முடியும்? இதை ஊதிப் பெருக்கிப் பிரச்சனையாக்கியது மட்டுமல்லாமல், ஜாக்குவார் தங்கம் வீட்டையும் தாக்கி அவரது மனைவியைக் காயப்படுத்துவதற்கு உடந்தையாய் இருப்பது கண்டனத்திற்குரியது.
இத்தகைய சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றுகூட நடிகர் ரஜினி, அஜீத் ஆகியோர் அறிக்கை வெளியிடவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
இவ்வாறான செயலில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்வதுதான் நாகரிக அணுகுமுறையாகும். ஆனால் அவ்வாறு அறிக்கை வெளியிடுவதற்குக்கூட அவர்கள் தயாராக இல்லை என்பதிலிருந்து அவர்களது உள்நோக்கம் புரிகிறது.
தமிழகத்தில் தமிழ் இனஉணர்வுக்கு பங்கம் விளைவிக்க யார் முயற்சி செய்தாலும் அதனை ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் அனுமதிக்காது’’என்று தெரிவித்துள்ளார்.
அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டும்: ரஜினிக்கு கடும் கண்டனம்! திரைப்பட சங்கங்கள் தீர்மானம்!
Posted by Pirem | 6:55 AM | Ajith, Rajini | 0 comments »
தனது ‘உண்மையற்ற பேச்சுக்காக’ அஜீத் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து திரைப்பட சங்கங்களின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அஜீத் பேச்சுக்கு கைதட்டி ஆதரவு அளித்ததற்காக ரஜினிகாந்துக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடிகர் நடிகைகளை விழாக்களுக்கு நிர்ப்பந்தப்படுத்தியும், மிரட்டியும் அழைக்கிறார்கள் என்று அஜீத் வெளியிட்ட கருத்தால் திரையுலகம் பிளவு பட்டு நிற்கிறது. அஜீத் தனது கருத்தை தைரியமாக கூறியுள்ளார். அவரை நான் பாராட்டுகிறேன் என்று ரஜினி ஆதரித்துள்ளார்.
ஆனால் பெப்சி, விநியோகஸ்தர் சங்கம், திரைப்பட உரிமையாளர் சங்கம் போன்றவை எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. சங்க விதிகளை பின்பற்றி நடக்கும்படி வற்புறுத்த சங்கத்தின் தலைவருக்கு உரிமை இருக்கிறது என்று பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் தெரிவித்தார். சங்க முடிவுகளை ஏற்காமல் ஒற்றுமைக்கு குந்தகம் செய்வோர் தூக்கி வீசப்படுவார்கள் என்று விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன் எச்சரித்தார்.
அஜீத் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றும், அவரது படங்களை திரையிடுவதா? வேண்டாமா? என்பது பற்றி வருகிற 3 ந்தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இதற்கிடையில் ஜாக்குவார் தங்கம் வீட்டில் ரஜினி, அஜீத் ரசிகர்கள் கல்வீசியது மேலும் பிரச்சினையை தீவிரமாக்கியது.
இந்த விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கவும், சமரசம் ஏற்படுத்தவும் தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்தது. அனைத்து திரைப்பட சங்கத்தினரையும் அவசரமாக அழைத்து இன்று ஆலோசனை நடத்தப்பட்டது.
அண்ணா சாலையில் உள்ள பிலிம்சேம்பர் தியேட்டரில் இக்கூட்டம் நடந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் தலைமை தாங்கினார். நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், சிவா, எடிட்டர் மோகன், சத்திய ஜோதி தியாகராஜன், ஆர்.கே.செல்வமணி, மாதேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அஜீத் பேச்சு பற்றி கூட்டத்தில் கார சாரமாக பேசப்பட்டது. ஒற்றுமையாக எவ்வாறு செயல்படுவது என்றும் விவாதிக்கப்பட்டது. கூட்ட முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
தமிழ் திரையுலகின் சார்பில் கடந்த பிப்ரவரி 6 ம் தேதி நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் அஜீத்தின் உண்மையற்ற பேச்சு கலையுலகினர் அனைவரையும் மனம் புண்படச் செய்துவிட்டது. எனவே அவர் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்தாக வேண்டும்.
அஜீத்தின் அந்தப் பேச்சு நடந்த பல நாட்களுக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் அஜீத்தின் தைரியத்தைப் பாராட்டுவதாக தெரிவித்தது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல இருந்தது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை இது புண்படுத்திவிட்டது.
இதனால் அஜீத்துக்கும் ரஜினிகாந்துக்கும் ‘தொழில் ஒத்துழையாமை’ (ரெட் கார்டு) போடும் அளவுக்கு நிலைமை மோசமானது. தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் தலையிட்டு நிலைமையை சுமூகமாக்க முயன்றது.
அதனால் அவர்களின் கோரிக்கையை ஏற்று, தொழிலாளர்கள் மனவேதனையில் இருந்தாலும், முடிவை மறுபரிசீலனை செய்து ரஜினிகாந்த் அவர்களின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இப்போதைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரச்சினை இத்துடன் சுமூகமாக பேசி முடிக்கப்பட்டு விட்டது. எனவே இது தொடர்பாக இனி யாரும் தனிப்பட்ட முறையில் பேட்டி அறிக்கை தரக் கூடாது என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கண்டன, வருத்தம் கோரும் தீர்மானத்தில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடம்பாக்கத்தில் நேற்றைய உஷ்ணநிலை கொஞ்சம் ஏற்றம்தான். மாலை மூன்று மணியிலிருந்தே பரபரக்க ஆரம்பித்துவிட்டது ஏரியா. முதல்நாள் பாடகசாலை என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய பெப்சி தலைவர் வி.சி.குகநாதனின் ஆவேச பேச்சு முன்னணி நாளிதழ் ஒன்றில் தலைப்பு செய்தியாக இடம் பெற்றது.
சங்க கட்டுப்பாடுகளை யாரும் மீறக்கூடாது. மிரட்டுவது வேறு. வற்புறுத்துவது வேறு. ஒரு கட்சி என்றால் அதன் சட்டதிட்டங்களுக்குக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு நடப்பது அவசியம். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கவோ, வெளியே து£க்கி போடவோ அந்த கட்சி தலைவருக்கு உரிமை இருக்கிறது. அதுபோல தொழிற்சங்க விதிகளை பின்பற்றி நடக்கும்படி வற்புறுத்தவும் மீறி செயல்படுபவர்களை மிரட்டவும் அந்த சங்கங்களுக்கு உரிமை இருக்கிறது என்ற குகநாதனின் பேச்சு இடம் பெற்றிருந்தது.
இன்னொரு பக்கத்தில் 'ரஜினி ஒரு கோமாளி' என்று பேட்டியளித்திருந்தார் ஜாக்குவார் தங்கம். இதையடுத்து மாலை ஜாக்குவார் தங்கத்தின் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அவரது மனைவிக்கு காயம் ஏற்பட்டது. இந்த செய்தி காற்றுவாக்கில் பரவ ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் கல்வீசிவிட்டு தப்பியோடினர் சில சமூக விரோதிகள். இத்தனைக்கும் உள்ளே ஒரு திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது.
இந்த சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பாக நடிகர் சங்கத்தின் சார்பில் ஒரு கண்டன அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் தன்னிச்சையாக செயல்படுகிறார். நடிகர்களை அவது£றாக பேசுகிறார் என்றும், இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு அவரை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனால் பரபரப்பான பெப்சி நிர்வாகிகள் உடனடியாக ஒரு அவசர கூட்டத்தை கூட்டியிருந்தனர். காரசாரமான விவாதங்களை தொடர்ந்து ஒரு முக்கியமான முடிவை எடுத்தார்களாம் அந்த கூட்டத்தில். என்னவென்று?
ரஜினி-அஜீத் இருவர் படங்களுக்கும் தொழில் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று. இந்த தீர்மானம் அறிக்கையாக பத்திரிகைகளுக்கு கொடுக்கப்படுவதற்கு முன் அவசரம் அவசரமாக பெப்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்ட தயாரிப்பாளர் சங்கம், அவர்களை சமாதானப்படுத்த முயன்றது. முதல்வர் திரையுலகத்திற்கு நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வரும் இந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட அதிரடி முடிவுகள் வேறு விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும் என்று அவர்களிடம் எடுத்து கூறியது. நடிகர் சங்கத்தையும், பெப்சி அமைப்பையும் சமாதானப்படுத்த பெரும் முயற்சி எடுத்து வருகிறது. இன்னும் முடிவு பெறாமல் இழுத்துக் கொண்டிருக்கும் இந்த பிரச்சனை இன்று காலையும் தொடர்கிறது.
இன்று காலை சுமார் பதினொரு மணிக்கு பெப்சி அமைப்பின் கூட்டம் நடந்து வருகிறது. என்ன முடிவெடுக்க போகிறார்கள் என்பது பிற்பகல் தெரியும்.
அண்மையில் முதலமைச்சருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அஜித் பேசும் போது இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் கலைஞர் மீதான அன்பும், மரியாதையும் நான் வைத்திருப்பதால் வந்துள்ளேன். ஆனால் சில நிகழ்ச்சிகளுக்கு நடிகர்கள் கட்டாயம் வர வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். காவேரி பிரச்சனை போன்ற அண்டை மாநிலங்களுடன் பிரச்சனை என்றால் நடிகர்கள் வந்து போராட வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். இவ்வாறு கூறியிருந்தார்.
இதுபற்றி நான் ஏற்கனவே நன்றி கெட்ட அஜித்தும் சுரணை கெட்ட ரசிகர்களும் என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதியிருந்தேன். தற்போது நடைபெறும் பிரச்சினைகளை கொண்டு இப்பதிவை எழுதுகிறேன். ஜாக்குவார் தங்கம் அவர்கள் ஒரு இதழுக்கு வழங்கிய பேட்டியில் அஜித்தையும் அஜித் கூறிய கருத்துக்களையும் விமர்சனம் செய்திருந்தார். தமிழ்நாட்டில் கருத்துக்கூற அஜித்துக்கு இருக்கிற உரிமையிலும் அதிக உரிமை மறத்தமிழன் ஜாக்குவார் தங்கத்திற்கு உண்டு. அனால் அஜித் ரசிகர்கள் என்ன செய்திருக்கிறார்கள் அவருடைய வீடு, கார் என்பவற்றை சேதப்படுத்தியிருக்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம் ? தமிழ் நாட்டில் ஒரு தமிழனின் வீட்டை தமிழர்களுக்கு எதிராக பேசிய ஒருவருக்காக சேதப்படுத்தியிருக்கிறார்கள். சினிமா மோகம் எமது தமிழ் இளைஞர்களை இவ்வளவு மோசமான நிலைக்கு அழைத்து சென்றிருக்கிறது.
ஆனால் இப்போது தியேட்டர் அதிபர் சங்கம் , நடிகர் சங்கம், பெப்சி , வினியோகஸ்தர் சங்கம் என்பன கண்டனம் தெரிவித்துள்ளன. இதுவரவேற்க வேண்டிய விடயம். சில சங்கக்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தயாராவதாக தெரிய வருகிறது.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில்,
’’தமிழர்களை வைத்து சம்பாதித்த நடிகர் அஜீத்குமார், தமிழர்களுக்கு எதிராக பேசி வருகிறார். காவிரி நீர் பிரச்சினைக்காக நடைபெற்ற போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.அவர் சோர்வாக இருந்தால், நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே...தொடர்ந்து ஏன் நடிக்க வேண்டும்?அஜீத் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும். இந்த பிரச்சினை பற்றி விவாதிக்க மார்ச் 3-ந் தேதி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.அஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா? என்பதை அந்த கூட்டத்தில் முடிவு செய்வோம்’’என்று கூறியுள்ளார்.
அஜித் போன்றோரின் பேச்சுக்கள், நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகளை அனைத்து சங்கங்களும் எடுப்பதற்கு முன்வரவேண்டும்.
தற்போது அஜித் தேவையில்லாமல் பேசி தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டு ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் இருக்கிறார்