விஜய்யின் 50 வது படமான சுறாவுக்கு எந்த வெட்டும் இல்லாமல் கிளீன் யு சான்று வழங்கியுள்ளது சென்சார் போர்டு.

ஏப்ரல் 30 ம் தேதி உலகெங்கும் வெளியாகவுள்ள சுறா படத்தை சங்கிலி முருகன் தயாரித்துள்ளார். சன் பிக்ஸர்ஸ் வெளியிடுகிறது.

வழக்கமான விஜய் படம் என்றாலும் விறுவிறுப்பான பொழுது போக்குப் படமாக உள்ளதாக படத்தைப் பற்றி பாஸிடிவ் டாக் பரவியிருப்பதால், நல்ல விலைக்கு வாங்கியுள்ளனர் விநியோகஸ்தர்கள்.

தெலுங்கில் வெளியான பாடல்களையே மணிஷர்மா இந்தப் படத்துக்காக ரீமேக் பண்ணியிருக்கிறார். ஆனாலும் சன் பிக்ஸர்ஸ் புண்ணியத்தில் பாடல்கள் ஹிட் ரகத்தில் சேர்ந்துவிட்டன.

நேற்று படம் பார்த்த சென்சார் குழுவினர் எந்த இடத்திலும் கை வைக்காமல் படத்துக்கு அனைவரும் பார்க்கலாம் என்ற யு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

0 comments