சென்னை, மும்பை அணிகளுக்கு இடையே இன்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 2010 இன் ஐ.பி.எல் சாம்பியனாக முடிசூடியது சென்னை சூப்பர் கிங்ஸ்! இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி, மும்பை அணியின் அதிரடி பந்துவீச்சுக்கு, சற்று திணறியது.

எனினும் சுதாகரித்துக்கொண்டனர். ஆரம்பத்தில் களமிறங்கிய முரளி விஜய் 6 சிக்ஸர்கள், 1 பவுன்றிகள் அடங்களாக 19 பந்துகளில் 26 ஓட்டங்களை எடுத்தார். அவருடன் இணைந்தாடிய மத்திவ் ஹேய்டன் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய, மாஷ்ட்டர் பிளாஷ்ட்டர் பேட்ஸ்மேன் சுரேஷ் ரைனாவின், (57) சளைக்காத ஆட்டம், அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தது. அவருடன் கை கோர்த்தாடிய தோனி, 2 பவுன்றிகள், 1 சிக்ஸர் அடங்களாக 22 ஓட்டங்களை எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை எடுத்தது சென்னை. ஐ.பி.எல் இறுதிப்போட்டி ஒன்றில் பெற்றுக்கொண்ட அதிகப்படியான ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

பதிலுக்கு களமிறங்கிய மும்பை அணி ஆரம்பத்திலேயே டவானை பறிகொடுத்தது. எனினும் சச்சினின் நிதானமான துடுப்பாட்டம், (48) அணியை ஓவருக்கு 6 ரன்கள் என்ற நிலையில் கொண்டு சென்றது. எனினும் மறுமுனையில் ஆடிய அனைவரும் குறைவான் ஆட்டங்களுக்கு ஆட்டமிழந்தன.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களையே எடுத்தது மும்பை அணி!

பந்து வீச்சில் ஜகதி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். தோனியின் தலைமையில் சென்னை அணி வீரர்கள் களத்தடுப்பே இன்றைய கள நிலைமைகளை மாற்றி அமைத்ததாக தெரிவிக்கபப்டுகிறது.


0 comments