தல ரசிகர்களுக்கு இது சோகமான செய்திதான். இந்த வருடம் அவர்கள் அசல் படத்துடன் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

திரையுலகில் அ‌‌ஜீத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி பனிபோல் விலகிவிட்டது. அவர் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி கிளவுட் நைன் தயா‌ரிப்பில் கௌதம் இயக்கும் துப்பறியும் ஆனந்த் படத்தில் நடிக்க எந்தத் தடையும் இல்லை. ஸ்கி‌ரிப்டும் தயார். ஆனால், படம் தொடங்கப்படுமா என்பது சந்தேகம்.

ஏற்கனவே கூறியபடி கார் ரேஸில் கலந்து கொள்ளப் போகிறாராம் அ‌‌ஜீத். இதற்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ரேஸ் எல்லாம் முடித்து அக்டோப‌ரில் படத்தை தொடங்கலாம் என்பது அவரது பிளான்.

அ‌‌ஜீத்தின் முதல் ம‌ரியாதை ரேஸுக்கா, சினிமாவுக்கா என்பது இன்னும் ஓ‌ரிரு நாளில் தெ‌ரிந்துவிடும்.

0 comments