இந்தியில் தாறுமாறாக ஹிட் ஆகியிருக்கும் த்ரி இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் கூட விரும்புகிறார்கள். இந்த பரபரப்பான நேரத்தில் படக்கென்று ரீமேக் ரைட்சை அமுக்கியிருக்கிறது ஜெமினி லேப் நிறுவனம். (சமீபத்தில் வந்த குட்டி இவர்கள் படம்தான்) மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடிக்க முதலில் யாரை அணுகுவது? பளிச்சென்று நினைவுக்கு வந்தவர் விஜய்தான். அவரும் மனப்பூர்வமாக சம்மதித்திருக்கிறாராம். இதற்கிடையில் படத்தில் நடிக்கும் மேலும் இரு ஹீரோக்களை பிக்ஸ் பண்ணும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம்.விஜய் நடித்தால் உதயநிதி ஸ்டாலினை இன்னொரு ஹீரோவாக அறிமுகப்படுத்தலாமே என்று நினைக்கிறதாம் இந்த நிறுவனம். கடந்த சில மாதங்களாக தனது அறிமுகத்திற்காக கதை கேட்டுக் கொண்டிருக்கும் உதயநிதி என்ன பதில் சொன்னாரோ? "அவரை சம்மதிக்க வைக்கிற வேலைய எங்கிட்ட விடுங்க" என்று தைரியம் கொடுத்திருக்கிறாராம் விஜய்.

விஜய், உதயநிதி என்று அந்தஸ்து உயர்கிறதே, த்ரி இடியட்ஸ் என்றா பெயர் வைப்பார்கள்? அப்படி வைத்தால் ரசிகர்கள் ஒப்புக் கொள்வார்களா? இப்படி நிறைய கேள்விகள். அதற்கெல்லாம் உடனுக்குடன் பதில் சொல்லவா போகிறார்கள்?

0 comments