தங்களுக்கு தர வேண்டிய 11.59 கோடி ரூபாயை 12 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்தாத வரை ரஜினியின் சுல்தான் தி வாரியர் படத்தை வெளியிட ஆக்கர் ஸ்டுடியோவை அனுமதிக்கக் கூடாது என அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மீடியா வொர்க்ஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு வரும் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சௌந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோ சுல்தான் தி வாரியரை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மீடியா வொர்க்ஸுடன் இணைந்து தயாரிக்க 2008ல் ஒப்பந்தம் போட்டது. ஒப்பந்த காலகட்டம் முடிந்த பிறகும் பட வேலைகள் முடியாததால் ரிலையன்ஸ் தனது ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. அதன் பிறகு சௌந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோ படத்தின் ஒட்டு மொத்த தயாரிப்பு பணியை ஏற்றுக் கொண்டது.
சுல்தான் தி வாரியர் பட வேலைகள் முடிந்து இன்னும் ஓரிரு மாதங்களில் படம் திரைக்கு வரவுள்ளது. இதனை அறிந்த ரிலையன்ஸ் ஆக்கர் ஸ்டுடியோ மீது தனது 11.59 கோடியை வட்டியுடன் செலுத்தும்படி வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு வரும் 29ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment