தமிழில் பெரிய ஹீரோக்கள் ஜோடியான மகிழ்ச்சியில் இருக்கிறார் தமன்னா. “கண்டேன் காதலை” ,“தில்லாலங்கடி”, “சுறா”சினிமா அனுபவங்கள் பற்றி தமன்னா சொல்கிறார்:-
“பையா”, “தில்லாலங்கடி”, “சுறா” படங்களில் நடிக்கிறேன். “பையா” பொங்கலுக்கு வருகிறது.கமலுடன் ஜோடி சேர ஆசை. அதற்கான வாய்ப்பு வந்தால் நழுவ விடமாட்டேன். நடிகைகளில் அசின், திரிஷாவை ரொம்ப பிடிக்கும். சிறந்த நடிகைகள். அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தமிழ் திரையுலகம் சிறப்பான நிலையில் உள்ளது. அதில் நானும் ஒரு நடிகையாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தி படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை.
நல்ல கதை வந்தால் இந்திக்கு போவேன். நீச்சல் உடையில் நடிக்கவே மாட்டேன். இரு தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன்.

நடிகைகள் பலர் இந்திக்கு போவது பணம் சம்பாதிக்கத்தான் என்று சொல்ல முடியாது. இந்தியில் நடிப்பதால் உலக அளவில் பிரபலமாக வாய்ப்பு கிடைக்கிறது.
விஜய்யுடன் “சுறா”வில் நடிப்பது மகிழ்ச்சியான அனுபவம். அவர் கடின உழைப்பாளி. இந்தியில் மாதுரி தீட்சித் பிடித்த நடிகை. பிடித்த நடிகர் ஹிருத்திக்ரோஷன். பிடித்தமான கிரிக்கெட் வீரர் சச்சின்.

நான் சினிமாவுக்கு வந்திருக்காவிட்டால் டாக்டராகி இருப்பேன். எனக்கு ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகள் தெரியும். என் தாய்மொழி இந்தி.

0 comments