சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற ரெட்டைச்சுழி படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்டு ஆடியோ சிடியை வெளியிட்ட ஐஸ்வர்யா ராயின் புகழ்பாடி வருகிறார்கள் மீடியா புகைப்படகாரர்களும், வீடியோ கிராபர்களும். காரணம், விழாவில் நூற்றுக்கணக்கான காமிராக்களின் ப்ளாஷ் வெளிச்சம் தன் மீது பட்டபோதெல்லாம் விழாவில் கலந்து கொண்ட இரண்டரை மணி நேரமும் மேடையில் வீற்றிருந்தபடியே ஒவ்வொரு புகைப்பட கலைஞருக்கும் ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கி விதவிதமான முகபாவனைகள் செய்து, ஒவ்வொரு கேமராமேனுக்கும் ஸ்பெஷல் ‌போஸ் கொடுத்த ஐஸ்வர்யாவின் அடக்கமும், அன்பும்தான்!

அதேமாதிரி விழா தொடங்குவதற்கு சற்று முன் ரெட்டைச்சுழி பாடல்கள் ஸ்கிரீனிங் செய்யப்பட்டபோது வந்த ஐஸ்வர்யாவுக்கும், அவரது அம்மாவுக்கும் பின் வரிசையில் முறையாக விஐபிகளுடன் சீட் ஒதுக்கப்படாத போதும் முன் வரிசையில் மேடைக்கு அருகில் பேனரை தள்ளி ஒதுக்கித் தரப்பட்ட சீட்டில் பவ்யமாக அமர்ந்து பாடல் காட்சிகள் மற்றும் ட்ரைலரை பார்த்து ரசித்ததிலும் ஐஸின் பெருந்தன்மை மிளிர்ந்தது. அழகியிடம் நம்மூர் அக்கடா... துக்கடா... நடிகைகளும் பாடம் படித்தால் சரி!

0 comments