மலையாளத்தில் சுமார் ஏழு வருடங்களுக்குப் பிறகு சித்திக் இயக்கிய படம் பாடிகார்ட். திலீப், நயன்தாரா நடித்திருந்த இந்தப் படத்தை விஜய்யை வைத்து தமிழில் இயக்குகிறார் சித்திக். நயன்தாரா வேடத்தில் அசின் நடிக்கிறார்.

இதையடுத்து மோகன்லால் நடிக்கும் ஒரு படத்தையும், மம்முட்டி நடிக்கும் ஒரு படத்தையும் சித்திக் இயக்குகிறார். இந்த இரு சூப்பர் ஸ்டார்களும் தாங்கள் நடிக்கும் படத்தை தாங்களே தயா‌ரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பிஸி ஷெட்யூ‌லில் விக்ரமுக்காக ஒரு ஸ்கி‌ரிப்டை சித்திக் தயார் செய்து வருகிறாராம். விக்ரம் ஓகே சொன்னால் தமிழ், இந்தி இரு மொழிகளிலும் படத்தை இயக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ராவண் படத்துக்குப் பிறகு செல்வராகவன் இயக்கும் படத்தில் நடித்துவரும் விக்ரம், அடுத்து பூபதி பாண்டியன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

0 comments