கிரிக்கெட் விளையாட்டின் ‘கோஹினூர்’ வைரம் சச்சின் டெண்டுல்கர் என்று புகழாரம் சூட்டியுள்ள வடேகர், அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பி.டி.ஐ.க்கு வடேகர் அளித்துள்ள பேட்டியில்,

“கிரிக்கெட்டின் கோஹினூர் வைரமாக சச்சின் திகழ்கிறார். அவரிடம் அளப்பரியாத திறமை புதைந்துள்ளது. அவரைப் போல் இன்னொரு வீரரை நாம் எப்போதும் காண முடியாது. அவர் பாரத் ரத்னா விருது பெற வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.

வடேகரின் கருத்தை வரவேற்பதாகத் தெரிவித்த கபில்தேவ்,

“நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவைப் பெற சச்சின் தகுதியானவர்” எனக் கூறியுள்ளார். கடந்த 20 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் சச்சின் பல சிகரங்களை எட்டியுள்ளதாகவும், அவருக்கு பாரத் ரத்னா விருது சிறந்த கௌரவமாக இருக்கும் என்றும் கபில் தெரிவித்துள்ளார்.

குவாலியரில் கடந்த 24ஆம் தேதி தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 ரன்களைக் குவித்து, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக இரட்டைச் சதம் விளாசிய வீரர் என்ற வரலாற்றுப் பெருமையை சச்சின் பெற்றார்.

0 comments