இன்றைய தேதியில் தமிழ்‌த் திரையுலகில் எடிட்டிங் பி‌ரிவில் கலக்கிக் கொண்டிருப்பவர் ஆண்டனி. கௌதமின் சமீபத்திய படங்கள் அனைத்தும் இவரது மேஜையில்தான் உருவாயின. சிவா‌ஜியும் இவரது கைவண்ணம்தான். எந்திரன் படத்துக்கும் இவர்தான் எடிட்டர்.

ஆண்டனிக்கு சமீபகாலமாக இயக்கத்தின் மீது தீராத மோகம். முன்னணி நடிகர்களை இயக்குவதற்காக கதையும் தயார் செய்து வைத்திருக்கிறார். விஜய்யிடம் கதை சொல்ல தேதி கேட்டிருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன.

எடிட்டராக இருந்த பி.லெனின் சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். ஆண்டனிக்கும் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைக்க வாழ்த்துவோம்.

0 comments