முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாரட்டு விழாவில் காவேரி பிரச்சனை, இலங்கை பிரச்சனைகளூக்கெல்லாம் குரல் கொடுப்பதற்காக நடிகர்களை மிரட்டி அழைக்கிறார்கள் என்று பேசினார் நடிகர் அஜீத்.

இது குறித்து ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் நக்கீரன் வாரமிருமுறை இதழில் ஒரு ஹீரோன்னா மக்களுக்கு நல்லது சொல்றவனா இருக்கனும் என்று அஜீத்தை சாடியிருந்தார்.

இதனால் அஜீத் ரசிகர்கள் தொலைபேசியில் ஜாகுவாரை மிரட்டி வந்துள்ளனர். ஜாகுவாரை தாக்கவும் முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை கே.கே. நகரில் அண்ணல்காந்தி தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று நள்ளிரவு வந்த கும்பல் எங்க தலயப்பற்றி தப்பாவா பேசுற என்று கூச்சல் போட்டு ஜாகுவாரின் காரை உடைத்துவிட்டு போயிருக்கிறது.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு படப்பிடிப்பு விசயமாக மதுரையில் இருந்த அவர் அவசரமாக சென்னை வந்துள்ளார்.

அவர் நக்கீரன் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், ‘’அஜீத் பேசியது சமூக பொறுப்பற்ற பேச்சு. அதற்கு நான் கண்டனம் தெரிவித்திருந்தேன்.

இதற்காக எனக்கு தொலைபேசியில் தொடர்ந்து மிரட்டல்கள் வந்துகொண்டிருந்தன.

தென் மாவட்டங்கள் நான் படப்பில் இருந்த போது என்னை தாக்கவு முற்பட்டார்கள். நான் எச்சரிக்கையாக சுதாரித்து வந்துவிட்டேன்.

இந்நிலையில் என் வீட்டிற்கு வந்து காரை உடைத்திருக்கிறார்கள்.

தாக்குதல் நடத்தச்சொல்லி அஜீத் ரசிகர்களை தூண்டி விடுகிறார். நான் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். எனது கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.

நடந்த இந்த சம்பவம் பற்றி காவல்துறை ஆணையரிடம் புகார் தெரிவிக்க விருக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.அஜீத் ரசிகர்கள் ஆவேசம்: ஜாகுவார் தங்கம் கார் உடைப்பு

ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் வீடு சென்னை கே.கே. நகரில் அண்ணல்காந்தி தெருவில் இருக்கிறது. நேற்று நள்ளிரவில் நடிகர் அஜீத் ரசிகர்கள் எங்க தலய பற்றி தப்பாவா பேசுறன்னு சத்தம் போட்டு ஜாகுவாரின் காரை உடைத்துவிட்டு போயிருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு படப்பிடிப்பு விசயமாக மதுரையில் இருந்த ஜாகுவார் தங்கம் அவசரமாக கிளம்பி சென்னை வந்தார்.

நடந்த இந்த சம்பம் தொடர்பாக காவல்துறை ஆணையரை சந்தித்து புகார் தெரிவிக்கபோவதாக தெரிவித்துள்ளார்.

ஃபெப்சி தொழிலாளர்கள், நலிந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என சினிமாவின்சகல தரப்பினருக்கும் வீடுகட்டிக் கொள்ள நிலம் ஒதுக்கியது அரசு.

கலைஞர்செய்த இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கடந்த 6-ந் தேதி நேருஉள்விளை யாட்டரங்கில் பிரமாண்ட மாக நடந்தது. சுவா ரஸ்யமாக போய்க்கொண்டிருந்த இந்த விழாவில் அஜீத்தின் பேச்சு சலசலப்பை உண்டாக்கியது.

’’ஒவ்வொரு மக்கள் பிரச்சினையின் போதும் சினிமாக்காரர்களை கட்டாயப்படுத்திஅழைக்கிறார்கள். காவிரி பிரச்சினைன்னா... மக்கள்ட்ட ஓட்டு வாங்கினஅரசியல் தலைவர்கள் அதை பாத்துக்குவாங்க. காவிரி பிரச்சினைக்காக நாங்க என்னபண்ணமுடியும். சினிமாக்காரர்களுக்கு அதுபத்தி தெரியாது.

எந்த நிகழ்ச்சிக்கும் நடிகர்-நடிகைகளை வரச்சொல்லி கட்டாயப்படுத்துறாங்க. வரலேன்னா.. ரெட்போடுவோம்னு மிரட்றாங்க. அதையும் மீறி நாங்க போகலேன்னா... இவன் தமிழன்இல்லைனு பிரச்சாரம் பண்றாங்க. இதற்கு ஒரு முடிவு கட்டணும்யா நீங்க.எங்களுக்கு அரசியல் வேண்டாம்.

எந்த பிரச்சினைக்கும் சினிமா அமைப்புகள்அறிக்கை விடுறதை, போராட்டம் நடத்துறதை நீங்கதான்யா தடுக்கணும். எந்தபிரச்சினையா இருந்தாலும் அரசாங்கம் பாத்துக்கும். எங்களுக்கும் சொந்தவேலைகள் உண்டு. அதையெல்லாம் விட்டுட்டு வரணும்னு மிரட்டக் கூடாது.

இந்த விழாவுக்கு மிரட்டியதால் வரலை. விரும்பித்தான்வந்தேன். சிகரெட் பிடிக்கிற மாதிரி நடிக்கக்கூடாதுனும் அரசியல்வாதிங்கமிரட்றாங்க. நாங்க அரசியலுக்கு வந்தாலும் ஏன் வர்றே?'னு மிரட்றாங்க.நாங்க சும்மா வரலை. ஸ்கிரீன் டெஸ்ட்ல இருந்து பல கட்டங்களைத் தாண்டித்தான் நடிகனானோம்.

அஜீத்தின் இந்த பேச்சு குறித்து நக்கீரன் வாரம் இருமுறை இதழில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் கருத்து தெரிவித்திருந்தார்.

அவர், நேத்து வந்த அஜீத் பங்களா கட்டலாம். அஞ்சு கோடி ரூபா கார்ல வலம் வரலாம். 60 வரு ஷமா உழைச்சு உழைச்சு நொந்து போயிருக்கும் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் மூலமா வீடு கிடைச்சிடக் கூடாது.

இப்படிப்பட்ட ஹீரோக்கள்ட்ட தொழிலாளர்கள் சுயமரியாதை இல்லாம மண்டய சொறிஞ்சுக்கிட்டு நிக்கணும் என்கிற ஆணவம் அஜீத்துக்கு. அதனாலதான் நன்றி தெரிவிக்கிற ஒரு விழாவுல... இப்படிநாகரீகம் இல்லாம பேசியிருக்கார். தமிழ் மண்ணுல இருக்க... தமிழ் மக்கள்பணத் துல வாழ்ற.... தமிழ்நாட்டு சோற சாப்பிடுற... ஆனா தமிழக மக்களோடமுக்கிய பிரச்சினையான காவிரி பிரச்சினைக்கு போராட வரமாட்ட. ஈழத் தமிழர்கள்அனுபவிக் கும் கொடுமையை உணர்வுபூர்வமா கண்டிக்க நடந்த கூட் டத்துக்குவரமாட்டேன்னு சொன்னீங்க.

‘உலகத் தமிழர்கள் "ஏகன்' படத்தை வெளியிடவிடமாட்டோம்னு கொந்தளிக்கவும், அந்த கூட்டத்துக்கு உன் தொழில்பாதுகாப்பாக இருக்கணும்னு ஓடி வந்த. உன் சுயநலத்துக்காக நீயாவந்திட்டு... மிரட்டி கூப்பிட்டாங்கன்னு சொன்னா என்ன அர்த்தம்?

ஒரு ஹீரோன்னா மக்களுக்கு நல்லதை சொல்றவனா இருக்கணும். எம்.ஜி.ஆர். சிகரெட் குடிச்சா நடிச்சார்? சிகரெட் குடிச்சு நடிச்சா அதை இளைஞர்கள்பின்பற்றுவாங்களேனு உன் சொந்த புத்திக்கு எட்டல.

அடுத்தவங்க அதச்சொன்னா... நாங்க அரசியலுக்கு வருவங்கிற. வாழவைக்கிற மக்கள் மேல அக்கறைஇல்லாத உன்னோட போலி ஹீரோ வேஷம்.... ஒரிஜினல் முகம் தெரிஞ்சு போச்சு. உனக்காக... நீ கைதட்டல் வாங்குறதுக்காக டூப் போட்டு அடிபட்டு, அவஸ்தைப்படுற தொழிலாளிகள் கொதிச்சுப் போய் இருக்காங்க. தொழிலாளிகள் முன்னாடிநீ பொது மன்னிப்பு கேட்க ணும். இல்லேன்னா போராட்டம் நடத்துவோம். அய்யாஅஜீத்து.... உன்ன அல்டி மேட் ஸ்டார் ஆக்கினதுக்கா ஆப்பு வைக்கப்பாக்குற’’என்று கருத்து தெரிவித்திருந்தார்.

ஜாகுவாரின் இந்த கருத்துக்கு அஜீத் ரசிகர்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வந்துகொண்டிருந்தன.

இந்நிலையில் அவரின் கார் தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறது.

0 comments