அண்மையில் முதலமைச்சருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் அஜித் பேசும் போது இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் கலைஞர் மீதான அன்பும், மரியாதையும் நான் வைத்திருப்பதால் வந்துள்ளேன். ஆனால் சில நிகழ்ச்சிகளுக்கு நடிகர்கள் கட்டாயம் வர வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். காவேரி பிரச்சனை போன்ற அண்டை மாநிலங்களுடன் பிரச்சனை என்றால் நடிகர்கள் வந்து போராட வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். இவ்வாறு கூறியிருந்தார்.

இதுபற்றி நான் ஏற்கனவே நன்றி கெட்ட அஜித்தும் சுரணை கெட்ட ரசிகர்களும் என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதியிருந்தேன். தற்போது நடைபெறும் பிரச்சினைகளை கொண்டு இப்பதிவை எழுதுகிறேன். ஜாக்குவார் தங்கம் அவர்கள் ஒரு இதழுக்கு வழங்கிய பேட்டியில் அஜித்தையும் அஜித் கூறிய கருத்துக்களையும் விமர்சனம் செய்திருந்தார். தமிழ்நாட்டில் கருத்துக்கூற அஜித்துக்கு இருக்கிற உரிமையிலும் அதிக உரிமை மறத்தமிழன் ஜாக்குவார் தங்கத்திற்கு உண்டு. அனால் அஜித் ரசிகர்கள் என்ன செய்திருக்கிறார்கள் அவருடைய வீடு, கார் என்பவற்றை சேதப்படுத்தியிருக்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம் ? தமிழ் நாட்டில் ஒரு தமிழனின் வீட்டை தமிழர்களுக்கு எதிராக பேசிய ஒருவருக்காக சேதப்படுத்தியிருக்கிறார்கள். சினிமா மோகம் எமது தமிழ் இளைஞர்களை இவ்வளவு மோசமான நிலைக்கு அழைத்து சென்றிருக்கிறது.

ஆனால் இப்போது தியேட்டர் அதிபர் சங்கம் , நடிகர் சங்கம், பெப்சி , வினியோகஸ்தர் சங்கம் என்பன கண்டனம் தெரிவித்துள்ளன. இதுவரவேற்க வேண்டிய விடயம். சில சங்கக்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தயாராவதாக தெரிய வருகிறது.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில்,
’’தமிழர்களை வைத்து சம்பாதித்த நடிகர் அஜீத்குமார், தமிழர்களுக்கு எதிராக பேசி வருகிறார். காவிரி நீர் பிரச்சினைக்காக நடைபெற்ற போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.அவர் சோர்வாக இருந்தால், நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே...தொடர்ந்து ஏன் நடிக்க வேண்டும்?அஜீத் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும். இந்த பிரச்சினை பற்றி விவாதிக்க மார்ச் 3-ந் தேதி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.அஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா? என்பதை அந்த கூட்டத்தில் முடிவு செய்வோம்’’என்று கூறியுள்ளார்.

அஜித் போன்றோரின் பேச்சுக்கள், நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகளை அனைத்து சங்கங்களும் எடுப்பதற்கு முன்வரவேண்டும்.

தற்போது அஜித் தேவையில்லாமல் பேசி தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டு ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் இருக்கிறார்

0 comments