சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் அச‌ல் முதலிடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் இருந்த கோவா மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்திலிருந்த தமிழ்ப் படம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

5. குட்டி
பொங்கலுக்கு வெளியான குட்டி பெயருக்கு ஏற்ப கொஞ்சமாகவே வசூலித்துள்ளது. மூன்று வாரங்கள் இறுதியில் இதன் மொத்த வசூல் 1.5 கோடிகள். சென்ற வார இறுதி மூன்று நாள் வசூல் 6.5 லட்சங்கள்.

4. ஆயிரத்தில் ஒருவன்
மூன்று வாரங்கள் முடிவில் மூன்று கோடிகள் வசூலித்துள்ளது செல்வராகவனின் ச‌ரித்திரப் படம். சென்ற வார இறுதியில் இதன் வசூல் ஏறக்குறைய ஒன்பது லட்சங்கள்.

3. கோவா
ஓ‌‌ரினச் சேர்க்கைக்கு எதிரான கலாச்சாரப் பத்தி‌‌ரிகைகளின் விமர்சனம் கோவாவின் வசூலை பாதித்துள்ளது. சென்ற வார இறுதியில் 22 லட்சங்கள் வசூலித்துள்ள இப்படம் இதுவரை 1.12 கோடிகள் வசூலித்துள்ளது.

2. தமிழ்ப் படம்
தமிழக பைரஸி மார்க்கெட்டில் அசல் திருட்டு விசிடியே தாராளமாக கிடைக்கும் போது தமிழ்ப் படத்தின் டிவிடி மட்டும் கிடைப்பதில்லையாம். போலீஸார் கன்ட்ரோல் செய்துள்ளதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. இதுபோன்ற அதிரடி சலுகை திட்டங்களால் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது இப்படம். இதுவரை 76 லட்சங்களை வசூலித்துள்ள இப்படம் சென்ற வார இறுதியில் 25.8 லட்சங்களை வசூலித்துள்ளது. வாழ்க காவல்துறை.

1. அசல்
அ‌ஜித்தின் 49வது படம் வழக்கம் போல ஓபனிங்கில் அடித்து தூள் கிளப்பியுள்ளது. இதன் முதல் மூன்று நாள் வசூல் ஏறக்குறைய 63 லட்சங்கள். ஆனால், அசல் டிக்கெட்டுகள் தற்போது திரையரங்குகளில் எளிதாக கிடைக்கிறது. அடுத்த வாரம் இந்த வசூலை அசல் தக்க வைத்துக் கொள்ளுமா என்பது மிகப் பெ‌ரிய சந்தேகம்.

0 comments