ஜி.கே.பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் விக்ரம் கிருஷ்ணா தயாரித்திருக்கும் மற்றுமொரு விஷால் படம். திரு படத்தை இயக்கியிருக்கிறார். இவர் தேசிய விருது வாங்கிய இயக்குனர் அகத்தியனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
தீராத விளையாட்டுப் பிள்ளை வாழ்க்கையில் எல்லாவற்றையும் பெஸ்டாக செலக்ட் செய்யும் ஒரு பணக்கார இளைஞனைப் பற்றியது. தான் திருமணம் செய்யப் போகும் பெண்ணும் தி பெஸ்டாக இருக்க வேண்டும் என்பதற்காக மூன்று பெண்களை காதலிக்கிறான், மூன்றில் ஒருவரை திருமணம் செய்யும் நோக்கத்துடன்.
இந்த த்ரீ இன் ஒன் லவ் என்ன மாதிரியான பிரச்சனைகளை கொடுத்தது என்பது கதை.
நீது சந்திரா, தனுஸ்ரீ தத்தா, சாரா ஜென் என்று மூன்று நாயகிகள். சினேகா முக்கியமான வேடம் ஒன்றில் நடித்துள்ளாராம். விஷாலுக்கு காமெடி விஷயத்தில் கை கொடுத்திருப்பவர் சந்தானம்.
முஷ்டி மடக்காமல் விஷால் நடித்திருக்கும் முதல் ரொமாண்டிக் காமெடி என்று இந்தப் படத்தைச் சொல்லலாம். பாடல் காட்சிகளுக்கு அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்கள். நீது சந்திராவை தண்ணிக்குப் பதில் கார மிளகாயில் குளிக்க வைத்த காட்சியொன்றும் படத்தில் உண்டு.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு அர்விந்த் கிருஷ்ணா. வாலி, பா.விஜய் பாடல்கள் எழுதியுள்ளனர். பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனின் மகன் திலிப் சுப்பராயன் சண்டைக் காட்சிகள் அமைத்திருக்கிறார்.
நாளை வெளியாகும் இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
தீராத விளையாட்டுப் பிள்ளை - முன்னோட்டம்
Posted by Pirem | 10:28 AM | Movie Review | 0 comments »
Subscribe to:
Post Comments (Atom)
0 comments
Post a Comment