முன்னணி நடிகர்கள் நடிக்கும் படமாக இருந்தால் எந்த இயக்குநராக இருந்தாலும் நடிகர்கள் காட்சிகள் போன்றவற்றில் மூக்கை நுழைப்பது வழக்கம். ‘என்ன இந்த சீன்ல இந்த டயலாக்கை வெச்சிருக்கீங்க...? இதுக்கு வேற ஆங்கிளை வைக்கலாமே’ என்று சொல்வார்கள். கேட்டால், என்னுடைய ஆர்வத்துக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. அந்த ஆர்வத்தின் காரணமாக ஐடியாவாகத்தான் இதையெல்லாம் நான் சொன்னேனே தவிர மற்றபடி இயக்குநரின் வேலைகளில் நான் மூக்கை நுழைக்கவில்லை என்பார்கள்.

ஆனால் அஜித்தோ, இயக்குனரில் வேலைகளில் தாம் மூக்கை நுழைத்ததை சொல்லும் விதமாக டைட்டிலிலும் தமது பெயரை இடம் பெறச் செய்துள்ளார்.

நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்லை என்று சொல்லும் நடிகர்களுக்கு மத்தியில் இது எவ்வளவோ பரவாயில்லை தான். அசல் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இணை இயக்கம் என எல்லாவற்றிலும் அஜித் பெயர் நீக்கமற நிறைந்திருக்கிறது.

0 comments