யுஎஸ் பாக்ஸ் ஆஃபிஸில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து சாதனைப் படைத்து வருகிறது அவதார். சென்ற வாரம் வெளியான எட்‌ஜ் ஆஃப் டார்க்னெஸ், வென் இன் ரோம் ஆகிய திரைப்படங்களால் அவதாருக்கு அடுத்த இடத்தையே பிடிக்க முடிந்திருக்கிறது.

5. தி புக் ஆஃப் ஏலி
சென்ற வார இறுதியில் இப்படம் 8.91 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதன் இதுவரையான மொத்த வசூல், 74.5 மில்லியன் டாலர்கள்.

4. டூத் பெய்‌ரி
டூத் பெய்‌ரி சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. சென்ற வாரம் இப்படம் 10 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதன் மொத்த வசூல் 26.1 மில்லியன் டாலர்கள்.

3. வென் இன் ரோம்
சென்ற வாரம் வெளியான படம் தனது ஓபனிங் வீக் எண்டில் பிடித்திருப்பது மூன்றாவது இடம். இதன் முதல் மூன்று தின வசூல் 12.4 மில்லியன் டாலர்கள்.

2. எட்‌ஜ் ஆஃப் டார்க்னெஸ்
இந்தப் படமும் சென்ற வாரமே திரைக்கு வந்தது. முதல் வாரத்திலேயே இரண்டாவது இடம். வசூல் 17.2 மில்லியன் டாலர்கள்.

1. அவதார்
ஏழு வாரங்களுக்குப் பிறகும் இப்போதும் பாக்ஸ் ஆபிஸில் அவதார்தான் ராஜா. சென்ற வார இறுதியில் 31.3 மில்லியன் டாலர்களை வசூலித்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதுவரையான மொத்த வசூல் 596 மில்லியன் டாலர்கள்.

0 comments