சிவாஜி பிலிம்ஸ் வெளியீடாக அசல் திரைப்படம் அண்மையில் வெளிவந்து சுமாராக ஓடிக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்த விடயம் .

இப்படம் வெளிவந்து முன்றாம் நாளிலேயே 18 கோடி வசுலித்ததாக கூறபபட்டது . ஆனால் அச்செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை. அப்போதே மக்கள் மத்தியில் இப்படம் சரியாக போகவில்லை அதனால் தான் இவ்வாறான செய்திகள் பரப்பப்படுவதாக பேச்சுக்கள் அடிபட்டன.

இச்செய்திகளுக்கெல்லாம் மகுடம் வைத்தால் போல் இப்போது ஓர் அறிவிப்பு அசல் டீம் சார்பில் வெளியாகியுள்ளது.

அசல் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு தியேட்டர்களில் ஒரு ‌போட்டி கூப்பன் வழங்கப்படுகிறது. அந்த கூப்பனை நிரப்பி, அசல் படம் பார்த்தற்கான டிக்கெட்டை இணைக்க வேண்டும்.

குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் ரசிகர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட உள்ளது. முதல் 30 நபர்களுக்கு தலா 1 பவுன் தங்க நாணயமும், இரண்டாவது 30 நபர்களுக்கு தலா அரை பவுன் தங்க நாணயமும், மூன்றாவது 60 பேருக்கு தலா கால் பவுன் தங்க நாணயமும், நான்காவது 225 பேருக்கு வெள்ளி நாணயமும் பரிசாக வழங்கப்படுகிறது. இது தவிர 660 பேருக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும் என்று சிவாஜி புரொடக்ஷன் தெரிவித்துள்ளது. இப்போட்டி பிப்ரவரி 15 முதல் மார்ச் 1ம் தேதி வரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்செய்தி வெளியாகியதிலிருந்து அசல் திரையிடப்பட்டுள்ள தியட்டர்களில் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக தெரியவருகிறது. படம் சரியில்லாததால் தான் இவ்வாறான போட்டிகள் அறிவிக்கப்பட்டு படத்தை ஓட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments