விஜயின் 50ஆவது படமான சுறாவின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார் மணிசர்மா இசை அமைத்துள்ளார் இப்படத்தை ராஜ்குமார் இயக்கியுள்ளார் சுறா திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே விஜய் தனது அடுத்த படத்துக்கான ஆயத்தபணிகளை தொடங்கியுள்ளார் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடிக்கிறார். விஜயும் அசினும் இணைந்து நடித்த போக்கிரி, சிவகாசி என்பன பெரும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஹிந்தி கஜினி வெற்றியின் பின்னர் அங்கே வாய்ப்புக்கள் அதிகமாக இருந்தமையால் தமிழ் சினிமா பக்கம் திரும்பி பார்க்காமல் இருந்த அசின் ஹிந்தியில் அடுத்தடுத்து சில தோல்விகளின் பின்னர் வாய்ப்புக்கள் குறைந்திருந்த வேளையில் விஜயுடன் இணைய சந்தர்ப்பம் கிடைத்ததும் அதனை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.

இப்படத்தை இயக்குனர் சித்திக் இயக்குகிறார் இவர் விஜயுடன் இணைந்து ப்ரண்ட்ஸ் எனும் மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்தவர் எனொஅது குறிப்பிடத்தக்கது.

வெற்றி கூட்டணியை சேர்ந்த விஜய் , அசின் , சித்திக் இணைவதால் விஜயின் 51 ஆவது படமும் மிகப்பிரமாண்டமான வெற்றியை ஈட்டிக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

0 comments