சித்திக் இயக்கத்தில் திலீப்,​​ நயன்தாரா நடித்த "பாடிகார்ட்' மலையாளப் படம் கேரளத்தில் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.​ இதையடுத்து இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.​ இதில் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார்.​

பாலிவுட்டில் நடித்துக்கொண்டிருக்கும் அஸின் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.​ "பாடிகார்டு' ஹிந்தியிலும் இதே பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.​ அதில் சல்மான்கான் கதாநாயகனாக நடிக்கிறார்.​

தமிழ்,​​ ஹிந்தி இரண்டு ரீமேக் பதிப்புகளையும் சித்திக் இயக்குகிறார்.​ இவர் ஏற்கெனவே தமிழில் "ப்ரண்ட்ஸ்',​ "எங்கள் அண்ணா',​ "சாது மிரண்டா' படங்களை இயக்கியவர்.

0 comments