இளைய தளபதி விஜய் நடித்த காவலன் படத்தை புறக்கணிக்குமாறு முகவரியில்லாத தமிழீழ புரட்சிகர மாணவர்கள் அமைப்பு என்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களின் உள்நோக்கம் என்ன? இவர்கள் உண்மையில் இன உணர்வினால் செயற்படுகிறார்களா? அல்லது விஜய் மீதுள்ள காழ்ப்புர்ச்சியினால் இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுகிறார்களா? என்பதுதான் எம்முன்னுள்ள மிகப்பெரிய கேள்வி.

இவ்விடயத்தை நாம் உற்றுநோக்குவோமாக இருந்தால் இவர்களின் நோக்கம் நன்கு புலப்படும். முன்பும் விஜயின் வேட்டைக்காரன் வெளியான போது விஜய் அன்ரனியை எதிர்த்து வேட்டைக்காரன் திரைப்படத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தார்கள். ஆனால் அதன் பின்பு வெளியான விஜய் அன்ரனியின் எந்த படத்தையும் யாரும் புறக்கணிக்கவும் இல்லை அதைப்பற்றி யாரும் வாய் திறக்கவும் இல்லை. இதிலிருந்து இவர்களின் நோக்கம் நன்கு தெளிவாக தெரிகிறது.

இன்னொரு விடயத்தையும் பார்ப்போம் தடையை மீறி கொழும்பில் நடந்த ஐஃபா விழாவில் பங்கேற்ற விவேக் ஓபராயுடன் இணைந்து “ஐஃபா விழா விவகாரம் செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களே… என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்துவிடாது. என்று எகத்தாளமாக பேசிய சூர்யா நடித்துள்ள "ரத்த சரித்திரம்" படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தை பற்றி எந்த அமைப்பும் வாய் திறக்கவில்லை. இந்த விடயத்தில் எங்கே போனது இவர்களின் இன உணர்வு?

எனவே யாராக இருப்பினும் இதயசுத்தியுடன் செயற்படுங்கள். இவ்வாறு காழ்ப்புர்ச்சியுடன் செயற்படாதீர்கள்.

0 comments