இன்றைய தேதியில் ஊடகங்களின் மெகா அறுவடை நித்யானந்த‌ரின் காதல் லீலைகள். நாளொரு புகைப்படமும், பொழுதொரு வீடியோவுமாக கல்லாகட்டி வருகின்றன தொலைக்காட்சிகளும், பத்தி‌ரி‌க்கைகளும். இந்த அமுதசுரபியை நமது திரைத்துறையினர் மட்டும் விட்டு வைப்பார்களா?

ஷக்தி சிதம்பரம் இயக்கும் குரு சிஷ்யன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. என்றாலும் அவசர அவசரமாக சில காட்சிகளை ஷூட் செய்து படத்தில் இணைத்திருக்கிறார்கள். அந்தக் காட்சிகள் நித்யானந்த‌ரின் காதல் லீலையை காமெடி செய்யும் காட்சிகள் என்பதை சொல்லத் தேவையில்லை.

குரு சிஷ்யனில் சுந்தர் சி., ஸ்ருதி (இந்திரவிழா ஹேமமாலினி) நடித்துள்ளனர். இவர்களின் காதல் காட்சியை நித்யானந்தர் வீடியோவுக்கு எந்தவிதத்திலும் குறையாத வகையில் படமாக்கியுள்ளார் ஷக்தி சிதம்பரம். அதிலும் ஸ்ருதியின் சிங்கிள் பீஸ் நீச்சல் உடை காட்சிகள் டபுள் ஏ ரகம்.

சுந்தர் சி., சத்யராஜுடன் கிரண் ஆடும் வாங்கோண்ணா ‌‌ரீமிக்ஸ் பாடல் மிக கவர்ச்சியாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த கிளுகிளுப்பு போதாது என்று நித்யானந்தர் காட்சியையும் சேர்த்திருக்கிறார்கள்.

உலகமே அழிந்தாலும் உண்டியலில் சில்லறை சேர்ந்தால் ச‌ரிதான்.

0 comments