ஒரு படம் முடியும் போது அடுத்தப் படம் தொடங்கியிருக்கும். இது விஜய் பாலிஸி. நேற்று பத்தி‌ரிகையாளர்கள் யாரையும் அழைக்காமல் சுறா படத்தின் ஆடியோவை வெளியிட்டது சன் பிக்சர்ஸ். (பத்தி‌ரிகையாளர்கள் வந்தால் படம் எடுப்பார்கள், பத்தி‌ரிகையில் பிரசுரமாகும். பிறகு சன் தொலைக்காட்சியில் ஆடியோ வெளியீட்டு விழாவை ஒளிபரப்பும் போது ரசிகர்களுக்கு அது பழசாகிவிடும்.)

ஏப்ரலில் சுறா வெளியாகிறது. அதற்குமுன் தனது அடுத்தப் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார் விஜய்.

விஜய்யின் 51வது படத்தை சித்திக் இயக்குகிறார். மலையாளத்தில் இவர் இயக்கிய பாடிகா‌ர்ட் படம்தான் சில மாறுதல்களுடன் விஜய்க்காக தயாராகியிருக்கிறது. இதில் விஜய் ஜோடியாக அசின் நடிக்கிறார்.

ஏப்ரல் 7ஆம் தேதி கும்பகோணத்தில் படப்பிடிப்பை தொடங்க விஜய் திட்டமிட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. பெய‌ரிடப்படாத இந்தப் படத்தில் அசின் தந்தையாக ரா‌ஜ்கிரண் நடிக்கிறார்.

0 comments