சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முரளி விஜய் 39 பந்துகளில் 78 ரன்களை விளாசினார்.

இருப்பினும் கடைசியில் தோனியையும், மோர்கெல்லையும் அடுத்தடுத்து ஸ்டெய்னும், காலிஸும் வீழ்த்த கடைசி இரண்டு ஓவர்களில் 16 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

அப்போது வினய் குமார் பந்து வீச பத்ரிநாத் ஒரு பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

ரெய்னா இதில் கிராஸ் செய்து பேட்டிங் முனைக்கு வந்து அடுத்த பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் அபாரமாஅன சிகருக்குத் தூக்க ஆட்டம் சென்னை அணிக்கு சாதகமாகத் திரும்பியது.

துவக்கத்தில் முரளி விஜய் இன்று அனாயாச மட்டை சுழற்றலில் ஈடுபட்டார். அவர் பிரவீண் குமாரின் 2-வது ஓவரில் 3 சிக்சர்கள் ஒரு பவுண்டரி உட்பட 24 ரன்களை விளாச ஸ்கோர் 3 ஓவர்கள் முடிவில் 38 ரன்களை எட்டியது.

அதன் பிறகு அனில் கும்ளே பந்து வீச வந்தார் அப்போது 12 ரன்கள் எடுத்த ஹெய்டன் ஸ்டம்ப்டு ஆனார்.

ஆனால் அதன் பிறகும் முரளி விஜய் நிறுத்தவில்லை. அவர் கெவின் பீட்டர்சன் பந்துகளில் மேலும் 3 சிக்சரக்ளை வெளுத்தார். 4 பவுண்டரிகளையும் 6 சிக்சர்களையும் அடித்த முரளி விஜய் 39 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் ஸ்கோர் 10.5 ஓவர்களில் 105/2 என்று இருந்தது. ஆனால் அதன் பிறகு கும்ளே 4 ஓவர்களில் 16 ரன்களையே விட்டுக் கொடுத்தார். டேல் ச்டெய்ன் 4 ஓவர்களில் 20 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

இதனால் தோனி 19 பந்துகளில் 14 ரன்கள் என்று பிளேடு போட்டு ஆட்டமிழந்ததால் 16.3 ஓவரில் ஸ்கோர் 138 ரன்களைத்தான் எட்ட முடிந்தது.

இது ரெய்னாவிற்கு சுமையை ஏற்றியது. இன்னொரு முனையில் மோர்கெல் விக்கெட்டை ஜாக் காலிஸ் வீழ்த்த, பத்ரிநாத், வினய் குமாரிடம் ஆட்டமிழந்தார். இதனால் லேசான டென்ஷன் ஏற்பட்டது.

ஆனால் ரெய்னா கடைசியில் சிக்சர், பவுண்டரி அடித்து 19-வது ஓவரிலேயே வெற்றியை ருசிக்கச் செய்தார். இவர் 35 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

சென்னை அணி 165/5 என்று வெற்றி பெற்றது.

0 comments