தமிழர்கள் கையில் தமிழ் சினிமா இருக்க வேண்டும் என்று பெப்சி தலைவர் வி.சி.குகநாதன் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். எஸ்.ஆர்.எம் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் முழுக்க முழுக்க புதியவர்களை வைத்து 'சைதை செல்லா' என்ற படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை தென்னிந்திய வர்த்தக சபையில் வெளியிடப்பட்டது. பெப்சி தலைவர் வி.சி.குகுநாதன் முதல் சி.டி.,யை வெளியிட, நடிகர் ஆர்.கே., பெற்றுக்கொண்டார்.

அப்போது பேசிய வி.சி.குகநாதன், "இந்த படத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இதுவரை திரையுலகிற்கு வராமல் ஒதுங்கி இருந்திருக்கிறார்கள் இவர்களைப் போன்றவர்கள் இன்னும் அதிகமாக வரவேண்டும். அப்போதுதான் நம் தமிழ் சினிமா தமிழர்களின் கையில் இருக்கும். மேலும் இப்படத்தின் பாடல்களை பார்த்தபோது இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.

சீத்தாபதி இயக்கும் இப்படத்திற்கு ஜான் பீட்டர் இசையமைக்க, நீலமேகன் பாடல்களை எழுதியுள்ளார். நாயகனாக விஜய் ஆனந்த் அறிமுகமாகிறார். மிதுனா நாயகியாக நடிக்க, சீதா, பொன்னம்பலம், மயில்சாமி, மற்றும் பல நட்சத்திரங்கள் நடிக்கும் 'சைதை செல்லா' படத்தை எஸ்.ஆர்.முகேஷ், தயாரிப்பதோடு இப்படத்தில் காவல்துரை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து நடிகராகவும் அறிமுகமாகிறார்.

0 comments