ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.

நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சேவாக் 38 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 74 ரன்கள் எடுத்தார் மன்ஹஸ் 22 பந்துகளில் 32 ரன்களும், பாட்டியா 9 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்சருடன் 21 ரன்களும், தில்சான் 24 பந்துகளில் 15 ரன்களும் எடுத்தனர்.

சென்னை அணி சார்பாக பந்துவீச்சில் முரளிதரன் சிறப்பாக பந்து வீசினார் இவர் இரண்டு விக்கெட் வீழ்த்தினார் (தில்சான் ,சேவாக் )

அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக ஹைடன் 43 பந்துகளில் 9 பவுண்டரி, 7 சிக்சருடன் 93 ரன்கள் எடுத்தார். ரெய்னா 34 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். தமிழக வீரர்கள் பத்ரிநாத், முரளி விஜய் தலா 14 ரன்கள் எடுத்தனர்.

0 comments