விஜய்யின் 50வது படம் என்ற கெத்துடன் காஸ்ட்லியாகவே தயாராகியிருக்கிறது சுறா. சங்கிலி முருகன் தயா‌ரித்திருக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது.

வேட்டைக்காரன் படம் முடிந்தும் வெளியிடாமல் இழுத்தடித்த சன் பிக்சர்ஸ், சுறா விஷயத்தில் காட்டுவது ஜெட் வேகம். தீபாவளிக்குப் பார்த்தால் போதும் என்றுதான் சொன்னார்கள். ஆனால் சன் பிக்சர்ஸ் முடுக்கிவிட்ட வேகத்தில் அடுத்த மாதமே படம் திரைக்கு வருகிறது.

முன்னோட்டமாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை விம‌ரிசையாகக் கொண்டாட இருக்கிறார்கள். இதற்காக தேர்வு செய்திருக்கும் தேதி மார்ச் 26. அன்று சுறாவின் பாடல்களை வெளியிடுகிறார்கள்.

மணிசர்மா சுறாவுக்கு இசையமைத்திருக்கிறார். இவரும் விஜய்யும் இணைந்து பணியாற்றிய அனைத்துப் படங்களின் பாடல்களும் சூப்பர்ஹிட் என்பதால் சுறா பாடல்களும் நிச்சயம் ஹிட்டாகும் என்பதில் விஜய்யின் எதி‌ரிகளுக்கே நல்ல நம்பிக்கை இருக்கிறது.

விஜய் ஜோடியாக முதல் முறையாக தமன்னா நடித்துள்ளார்.

0 comments