நடிகையுடன் நித்யானந்தர் லீலை: சன் செய்திகள் வெளியிட்ட அதிர்ச்சியளிக்கும் வீடியோ

பிரபல மாடர்ன் சாமியாரான நித்யானந்தர், பிரபல நடிகையுடன் செக்ஸ் அனுபவிக்கும் காட்சிகளை சன் தொலைக் காட்சி இன்று செவ்வாய்க்கிழமை இரவு ஒளிபரப்பி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமுதம் போன்ற முன்னணி பத்திரிகைகளில் கதவைத் திற காற்று வரட்டும் என்றெல்லாம் வசீகரமான தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியவர் நித்யானந்தர்.

32 வயதாகும் இவருக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை. நல்ல ஆங்கிலப் புலமை, தமிழ் பேச்சுத் திறன் மிக்கவர்.

உலகின் ஆன்மீக ஒளி நானே என்று கூறிக் கொண்டவர். அமெரிக்காவின் இந்துப் பல்கலைக் கழகத்துக்கு தலைவர் இவர்.
இளம் வயதிலேயே புலன்களை அடக்கி பிரமச்சர்யம் மேற்கொள்பவர் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட இந்த சாமியார், நடத்திய காமலீலைகள் வெட்ட வெளிச்சமாகியுள்ளன.

நன்கு தெளிவான வீடியோ காட்சிகளாக இவை படம்பிடிக்கப்பட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பபட்டன.

இந்த வீடியோவில் இருப்பது நித்யானந்தர்தான் என்றும் அதில் வரும் நடிகை ஆர் என்ற எழுத்தில் ஆரம்பமாகும் பெயர் கொண்ட பிரபல தமிழ் நடிகை என்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி கூறியது. அவர் நடிகை ரஞ்சிதா என்று இப்போது வரும் செய்திகள் உறுதியாகக் கூறுகின்றன.

சாமியார் – நடிகை சம்பந்தப்பட்ட இன்னும் இரு அதிர்ச்சியான செக்ஸ் வீடியோக்கள் நாளை வெளியாகும் என்றும் நம்பகமான வட்டாரங்களிலிருந்து தகவல் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் வெளியானதும் உலகெங்கும் இந்த நித்யானந்தருக்கு உள்ள பக்தர்கள் (?!) பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

பெங்களூர்-திருவண்ணாமலை-கடலூரில் கலாட்டா!

இந்த சாமியாருக்கு உலகம் முழுக்க கிளைகள் உள்ளன. ஆசிரமங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கெல்லாம் இவருக்கு ஏராளமான பக்தர்களும் உண்டு.

இப்போது சாமியாரின் லீலைகள் வெளியானதும், அந்த ஆசிரமங்களுக்கு முன் குவிந்து கலாட்டாவில் ஈடுபட்டுள்ளனர் பக்தர்கள்.

பெங்களூர் பிடாதியில் 200 ஏக்கர் பரப்பளவில் இவருக்கு மிகப்பெரிய ஆசிரமம் உள்ளது. விஷயம் கேள்விப்பட்ட பக்தர்களும் மக்களும் இந்த ஆசிரமம் முன் குவிந்துவிட்டனர். ஆசிரமத்தை இழுத்து மூட வேண்டும் என்றும் போலிச்சாமியாரை கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரும் கலவரம் மூளும் அபாயம் இருப்பதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் உள்ளது நித்யானந்தர் ஆசிரமம். இங்கும் பெரும் கலாட்டாவில் ஈடுபட்டனர் மக்கள். சில உள்ளூர் கட்சிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு நித்யானந்தரை கைது செய்யக் கோரினர்.

சாமியார் இந்த ஆசிரமத்துக்குள் இனி கால் வைக்க முடியாது என்றும், தன்னை குற்றமற்றவர் என நிரூபித்த பிறகே அவரை அனுமதிப்போம் என்றும் கூறினர் அவரது பக்தர்கள்.

மக்களின் கோபத்தைப் பார்த்து பயந்த ஆசிரம ஊழியர்கள் தாங்களே நித்யானந்தரின் படங்களைக் கிழித்தெறிந்தனர்.

கடலூர் பகுதியில் நித்யானந்தருக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்துள்ளது. அவரது போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. அவற்றின் மீது சாணியை அடித்து ஆத்திரத்தைக் காட்டினர் மக்கள்.

செங்கம் டிஎஸ்பி தில்லைநாயகம், திருவண்ணாமலை நகர் டிஎஸ்பி வைத்தியலிங்கம் ஆகியோர் ஆசிரமத்துக்கு விரைந்தனர். இவர்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஆசிரமத்தை பாதுகாத்து வருகிறது.

கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் பதட்டமான நிலை காணப்படுகிறது.

புதுச்சேரியில் நித்யானந்தர் ஆசிரமம் சூறை

புதுச்சேரியில் உள்ள இந்த சாமியாரின் யோகா மையம், ஆசிரமம் போன்றவை மக்களால் சூறையாடப்பட்டது. பொருள்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்டும் மக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சாமியாரின் படங்கள் பொருள்களுக்கு தீவைத்தனர்.

கோவையில் செருப்படி…

கோவையிலும் நித்யானந்தருக்கு ஆசிரமக் கிளைகள் உள்ளன. இங்கும் மக்கள் ரகளையில் ஈடுபட்டனர். சாமியாரின் படங்களை செருப்பால் அடித்து ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர். கலாட்டாவில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

0 comments