சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா பிரபலங்களுடன் இருப்பது போல பல்வேறு படங்களை எடுத்து வைத்துள்ளார். அவர்களில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமும் ஒருவர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

அப்துல் கலாமை, நித்தியானந்தா சந்தித்தபோது அதை வீடியோவில் படம் பிடித்தவர் லெனின் கருப்பன்.

இவர்தான் ரஞ்சிதாவுடன் நித்தியானாந்தா படுக்கை அறையில் இருந்ததையும் படம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புண்ணிய பகுதியான திருவண்ணாமலையி்ல் பிறந்து 32 வயதில் முற்றும் துறந்த முனிவனுக்கு சமமாக மதிக்கப்பட்டு தேசம் மட்டுமல்ல உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான ஆன்மீக மடங்களை உருவாக்கி, லட்சக்கணக்கான பக்தர்களை பக்தி பரவசம் மட்டும் இன்றி அறிவியல் சார்ந்த இறை தத்துவங்களை பேசியும், கதவை திற காற்று வரும், என்பன உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக தொடர்களை எழுதி வந்த நித்யானந்தாவின் புகழ் எங்கும் பரவியிருந்தது.

இவரை உண்மையான சாமியார் என நினைத்து சமூகத்தின் மிக முக்கிய தலைவர்களும் அவரை மதித்தனர். இதில் நேர்மைக்கும், ஒழுக்கத்துக்கும் பேர் போன டாக்டர் அப்துல் கலாமும் ஒருவர். அவரையும் நம்ப வைத்து ஏமாற்றியுள்ளது இந்த நித்யானந்தா குரூப்.

நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ காட்சிகளை நித்யானந்தா ஆசிரம முக்கிய நிர்வாகியான சேலத்தை சேர்ந்த லெனின் என்ற கருப்பன் தான் எடுத்ததாக தெரிய வந்தது. இதை லெனின் கருப்பனே சென்னை காவல்துறை ஆணையரை சந்தித்து தெரிவித்தார். கூடுதலாக ஒரு வீடியோவையும் கொடுத்து விட்டு தலைமறைவாகி விட்டார்.

இந்நிலையில் 2006ம் ஆண்டு நித்யானந்தா தலைமை ஆசிரமமான பெங்களூரிலிருந்து நவம்பர் மாதம் நித்யானந்தம் என்ற மாத இதழ் வெளியிடப்பட்டது. அந்த இதழின் 2ம் பக்கம் (பின் அட்டை) நித்யானந்தா அப்போதைய ஜனாதிபதி கலாமை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து கூறுவது போல உள்ளது.

இந்த சந்திப்பை வீடியோவில் பதிவு செய்தவர் சாட்சாத் லெனின் கருப்பனேதான்.

0 comments