சாமியார் நித்தியானந்தா - நடிகை ரஞ்சிதா விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து ஒரு வாரத்தை தாண்டி விட்டாலும் பரபரப்பு இன்னமும் அடங்குவதாய் இல்லை. ரஞ்சிதா நடிகை என்பதால் இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் என்ன செய்யப்போகிறது என பலரும் கேட்டு வருகிறார்கள். நடிகைகளுக்கு சட்ட பாதுகாப்பு கொடுக்க வேண்டும், அதற்காக எவ்வளவு செலவானாலும் நான் தருகிறேன் என்று பேசிய நடிகர்கள் எல்லாம், இந்த பிரச்னை குறித்து வாய் திறக்க மறுக்கிறார்கள். முதலில் ரஞ்சிதா நடிகர் சங்க உறுப்பினரே இல்லை என்று கூறி மழுப்பிய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இப்போது அது ரஞ்சிதாவின் சொந்த விஷயம் என்று கூறி மீண்டும் மழுப்பியிருக்கிறார்.

அவர் நடிக்கும் புதிய படம் குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த சரத்குமாரிடம், நிருபர்கள் கேட்டதென்னவோ ரஞ்சிதா தொடர்பான கேள்விதான். அதற்கு பதில் அளித்த சரத், சாமியாருடன், ரஞ்சிதா சம்பந்தப்பட்ட காட்சியை ஒரு தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பியதை பார்ப்பதற்கு நெருடலாக இருந்தது. திரும்ப, திரும்ப அதை ஒளிபரப்பியது, சின்ன குழந்தைகளின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. ஒருவரின் கழுத்தை திரும்ப, திரும்ப அறுத்து காண்பிப்பது போல் இருந்தது. சாமியாரும், ரஞ்சிதாவும் விருப்பப்பட்டு ஒரு அறையில் தங்கியிருந்த பிரச்சினையில் யாரும் தலையிட முடியாது. அவர்கள் இருவரும், நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். இல்லற உறவில் ஈடுபட்டால் என்ன தவறு? என்று கேட்டால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்.

ரஞ்சிதா நடிகர் சங்க உறுப்பினராக இருக்கிறாரா, இல்லையா? என்பது பிரச்சினை அல்ல. ஆனால், ஒருவரின் சொந்த விஷயத்தில் நடிகர் சங்கம் தலையிட முடியாது. ரஞ்சிதா தன்னை சாமியார் பலவந்தம் செய்தார் என்று ஒருவேளை புகார் செய்திருந்தால் நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்திருக்கும். மாலை 6 மணிக்கு மேல் யாருடைய சொந்த விஷயங்களிலும் யாரும் தலையிட முடியாது. ஒருவரின் சொந்த விஷயத்தில் தலையிடுவது நடிகர் சங்கத்தின் வேலை கிடையாது. நடிகர் சங்கத்துக்கு என்று சில எல்லைகள் உள்ளன. அந்த எல்லையை நாங்கள் தாண்ட முடியாது, என்று கூறினார்.

0 comments