கமல் மர்மயோகி படத்தை அறிவித்த போது படத்தின் தயாரிப்பாளர் குறித்து பல்வேறு வாந்திகள் நிலவியது. வால்ட் டிஸ்னி படத்தில் முதலீடு செய்கிறது என்பது அதில் ஒன்று.

இந்தப் பொய்யான செய்தி கமல் மகள் படத்தில் உண்மையாகியிருக்கிறது.

லக் படத்துக்குப் பிறகு பலரிடம் கதை கேட்ட ஸ்ருதி இறுதியில் தெலுங்குப் படமொன்றில் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்தப் படத்தில் அவருடன் ஜோடியாக நடிப்பவர் சித்தார்த். படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ஸ்ருதியும், சித்தார்த்தும் காதலிக்கிறார்கள் என்று பத்திரிகைகள் கிசுகிசு எழுதியதும், ஸ்ருதி அதனை மறுத்ததும் சுவாரஸியமான விஷயங்கள்.

இந்த தெலுங்குப் படத்தை வால்ட் டிஸ்னி தயாரிக்கிறது. இதனை வால்ட் டிஸ்னிக்கான இந்திய அதிகாரி தெரிவித்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் மேலும் பலப் படங்கள் தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

0 comments