எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் இணைந்து தயாரித்திருக்கும் படம் விண்ணைத்தாண்டி வருவாயா. கௌதம் வாசுதேவ மேனன் படத்தை இயக்கியிருக்கிறார்.
WDஉதவி இயக்குனர் ஒருவர் கேரளாவிலிருந்து வரும் இளம் பெண்ணுடன் காதல் கொள்வதும் அதனால் வரும் பிரச்சனைகளும், காதலின் முடிவும்தான் படத்தின் கதை. கார்த்திக் என்ற உதவி இயக்குனராக சிம்பு நடித்துள்ளார். மலையாள கிறிஸ்தவ பெண் ஜெஸ்ஸியாக த்ரிஷா.
இவர்கள் இருவரையும் மிக இயல்பாக நடிக்க வைத்திருக்கிறார் கௌதம். படத்தின் கிளைமாக்ஸை நியூயார்க் நகரில எடுத்துள்ளனர்.
“விண்ணைத்தாண்டி வருவாயா என்னுடைய கேரியல் முக்கியமான படமாக இருக்கும். சிம்பு படம்னா விரல் வித்தை, பன்ச் டயலாக் இருக்கும்னு ஒரு இமேஜ் இருக்கு இல்லையா? அதை இந்தப் படம் மாற்றும்” என கூறுகிறார் சிம்பு.
“நான் இயக்கிய படங்களிலேயே மனசுக்கு ரொம்ப நெருக்கமான படம் இது. பிடித்த படமும் இதுதான்” என்கிறார் கௌதம். ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர விசிறி த்ரிஷா. அவரது இசையில் நடிக்க வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் விருப்பம். அந்த விருப்பம் இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியதாக சந்தோஷப்படுகிறார்.
கௌதமின் ஆஸ்தான கவிஞர் தாமரை பாடல்கள் எழுதியுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு. ஆண்டனி எடிட்டிங். கலை ராஜீவன். உடை நளினி ஸ்ரீராம்.
படத்தில் சிம்பு, த்ரிஷா உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் காட்சி இடம்பெறுகிறது. இதன் காரணமாக படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு.
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Hello,
Trisha acted in "Enakku 20 Unakku 18" and music composed by AR Rahman....
ethu vemarsanam??????????
yetho vimarsanam nu sonneenga??
vimarsanam na ennannu theriyuma???????????
Trisha acted in AAYUTHA EZHUTTHU,music composed by A.R.R.
விளம்பரம் பண்ணிட்டு விமர்சனம்னு போட்டு இருக்கீங்க? நல்லாதான்ய கெளம்பி இருக்கீங்கள்..ஹ்ம்ம் நடத்துங்க நடத்துங்க..