விஜய்யின் 50வது படமான சுறா வேகமாக தயாராகி வருகிறது. ரா‌ஜ்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். மணிசர்மா இசையமைக்க தமன்னா விஜய்யின் ஜோடி. ஏகாம்பரம் கேமரா.
சுறாவுக்குப் பிறகு விஜய் யார் படத்தில் நடிப்பார்? இந்தக் கேள்விக்குப் பதிலாக மூன்று பெயர்களை முன் வைத்தனர். ஒருவர் ஜெயம் ராஜா. இவர் விஜய்யிடம் கதை சொல்லி ஏற்கனவே ஒப்புதல் வாங்கியிருந்தார். ஆஸ்கர் பிலிம்ஸ் ஜெயம் ராஜா இயக்கும் படத்தை தயா‌ரிப்பதாக ஒப்பந்தம்.

இன்னொருவர் மலையாள இயக்குனர் சித்திக். தனது பாடிகார்ட் படத்தின் கதையை விஜய்யிடம் சொல்லி இவரும் ஏற்கனவே ஒப்புதல் வாங்கியிருந்தார்.

மூன்றாவது லிங்குசாமி. விஜய்க்கு கதை தயார் செய்து வைத்திருப்பதாக ஓபனாகவே அறிவித்திருந்தார்.

இந்த மூவ‌ரில் முந்திக் கொண்டவர் சித்திக் என்கிறார்கள். மலையாளத்தில் பாடிகார்ட் நன்றாகப் போவதால் உடனே அதை ‌‌ரீமேக் செய்ய விரும்புகிறாராம் விஜய். லிங்குசாமிக்கு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. அவரும் சிம்புவை வைத்து படம் இயக்க தயாராகி வருகிறார். ஜெயம் ராஜா?

‘ஆஸ்கர் பிலிம்ஸ் தயா‌ரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை நான் இயக்குகிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. சுறாவுக்குப் பிறகு நான் இயக்குகிறேனா இல்லை அதற்கு அடுத்து இயக்குகிறேனா என்பதெல்லாம் தெ‌ரியாது’ என கூறியிருக்கிறார் ஜெயம் ராஜா.

ஆக, விஜய்யை ஜெயம் ராஜா இயக்குகிறார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

0 comments