பகவதி படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்தவர் ஜெய். சென்னை 28 படத்தில் பத்து ஹீரோக்களில் ஒருவராக வந்து பின் சுப்பிரமணியபுரம் படத்தில் தன் அபார நடிப்பின் மூலம் தமிழ் திரையில் தன்னை பதிவு செய்தவர் ஜெய்.

வாமனன், கோவா வெற்றி படங்களைத் தொடர்ந்து வித்யாசமான கதையமைப்புள்ள அவள் பெயர் தமிழரசி படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

இப்படத்தின் நேர்காணலுக்காக சென்றிருந்த நம்மிடம் சில ஸ்வாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.



’’விஜய் சாருக்கு தம்பியாக நடித்ததாலோ என்னவோ நான் விஜய்க்கு ரசிகன். வேட்டைக்காரன் முதல் நாள் முதல் ஷோ பார்த்தேன்.

ஃபெப்சி கலை விழாவிலும் கூட ’புலி உருமுது’ பாடலுக்கு தான் நடனம் ஆடினேன். விஜய் படம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்னா.... என்றவர்.



திரையுலகில் எனக்கு ரொம்பவும் நெருக்கமானவர் சிம்பு. இருவரும் சேர்ந்தால் ஒரே ஜாலிதான். சினிமாவை பற்றிய நிறையவிஷயங்களை பகிர்ந்துகொள்வோம். உலக சினிமா பற்றி பேசுவோம். நிறைய டெக்னிகலான விஷயங்கள் பற்றியும் விவாதிப்போம்.

இந்த வரிசையில் அஜீத் சாரை நான் சொல்லாமல் இருக்கமுடியாது. சென்னை 28 படம் பார்த்தவுடன்
இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் என் நம்பர் வாங்கி என்னை தொடர்புகொண்டு என் நடிப்பை பாராட்டி பேசினார்.

என் ஒவ்வொரு படத்தையும் அஜீத் கவனித்து வருகிறார். என் வளர்ச்சியில் அவருக்கு ரொம்பவும் அக்கரையுண்டு. என் ஒவ்வொரு படத்துக்கும் தல’யிடம் இருந்து போன் வரும். அவருக்கு நான் என்றென்றும் நன்றி உள்ளவனாகவும் இருப்பேன். அதற்கேற்றார் போல் என் படங்களை தேர்வு செய்து வருகிறேன்’ என்றார்.



நான்கு படங்களுக்கு மேல் நடித்துவிட்டீர்கள் பெயருக்கு முன்னால் பட்டப் பெயர் எப்போ போடப்போரீங்க? என்று கேட்டதற்கு,

’அந்தப் பட்டப் பெயரை இயக்குனர் வெங்கட் பிரபு தேர்வு செய்துள்ளார், அல்டிமேட் ஸ்டாரிலிருந்து அல்டிமேட்’டை உருவி, இளைய தளபதியிலிருந்து தளபதி’யை உருவி இரண்டையும் சேர்த்து அல்டிமேட் தளபதி என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது என்று சொல்லி வாய்விட்டு சிரித்தார்... ( சும்மா கலாய்க்கிராங்க! ஹி... ஹி... )

0 comments