திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், பல்வேறு விழாக்களில் பங்கேற்க வேண்டுமென நடிகர் நடிகையர் மிரட்டப்படுகிறார்கள் என நடிகர் அஜீத் வெளிப்படையாகத் தெரிவித்தார். இதற்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கமும் கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து அவரது வீடு தாக்கப்பட்டது. பெப்சி தலைவர் வி.சி. குகநாதன், விநியோகஸ்தர் சங்கத்தலைவர் கலைப்புலி சேகரன் ஆகியோர் இருவரையும் கண்டித்தனர்.

இந்நிலையில் திரைப்பட சங்கங்களின் கூட்டு கூட்டம் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் தலைமையில் நடந்தது. இதில் ரஜினி, அஜீத் கருத்துக்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. அஜீத் பேச்சு உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். ரஜினிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நாடார் சமுதாய ஒருங்கிணைப்பும் அஜீத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆனால் அஜீத் ரசிகர்கள், எங்களது தலைவர் அஜீத்தும், அவருடைய ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்று கூறிவருகின்றனர்.

இந்நிலையில் தீர்மானத்தின்படி அஜீத் வருத்தம் தெரிவிப்பாரா? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்பட சங்கம் கூட்டு கூட்டத்தின் முடிவு பற்றி அஜீத் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் ஆதரவாளர்கள் போன்றோருடன் ஆலோசிக்கிறார். விரைவில் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments