இந்த நாட்டில் பக்தி என்பது படு பயங்கரமான பிஸினஸ். இதை பல்லாண்டு காலமாக எடுத்துச் சொல்லி வரும் நிஜமான பகுத்தறிவாளர்களின் (பகுத்தறிவு பிஸினஸ்மேன்களைச் சொல்லவில்லை!) பிரச்சாரங்களை மக்கள் மதிப்பதே இல்லை.எளிமையாய் கோவிலுக்குப் போய் லஞ்சம் கொடுக்காமல் சாமி கும்பிடுவதில் பெரும்பாலானோருக்கு நம்பிக்கையில்லாமல் போய் நெடுங்காலமாகிவிட்டது.

சும்மா கோயிலுக்குப் போனால் கூட, அய்யரிடம் ரூ 50 கொடுத்து, அடுத்தவர்கள் பொறாமையுடன் பார்க்க வேண்டும் என்பதற்காக சாமி கழுத்தில் உள்ள மாலையைக் கேட்கும் அல்பத்தனமான பக்திதான் பல பெரிய மோசடிகளின் அஸ்திவாரமாக உள்ளது.

இன்னும் சில பக்திமான்களோ பக்தியைக் கூட பலர் மெச்ச காட்ட வேண்டும் என்ற மனநோய் பீடிக்கப்பட்டவர்களாகவே காணப்படுகிறார்கள்.

இவர்களுக்காகவே ஆசிரம வலை விரித்துக் காத்திருக்கிறார்கள் சுப்பிரமணியன்களும், விஜயகுமார் நாயுடுகளும், ராஜசேகரன்களும் ஜெயேந்திரன், கல்கி, நித்யானந்தன் என்ற கள்ளப் பெயர்களில். பெயரிலேயே போலியாக இருப்பவனிடம் நிஜ பக்தியைத் தேடி ஓடும் இந்தக் கூட்டத்தைப் பற்றி நன்கு தெரிந்து, வித விதமாக மொட்டை போடுகிறார்கள்.

கத்தியை இவர்கள் எப்படிச் சுற்றி வளைத்து வித்தை காட்டினாலும் கடைசியில் போடப்படுவது மொட்டைதான் என இந்த ஆட்டுமந்தை பக்திமான்களுக்குப் புரிவதே இல்லை!

இங்கே தரப்பட்டுள்ள வீடியோ சன் டிவியில் ஒளிபரப்பான கல்கி ஆசிரம கூத்துக்கள் பற்றியது.
ல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கழுகு என்ற ரஜினி படமும் அதில் காட்டப்படும் ஆசிரமக் கூத்துக்களும் நினைவிருக்கலாம். அதை விட பலமடங்கு மோசமான, பயங்கரமான போதை மருந்து கும்பல் இந்த கல்கி ஆசிரமத்துக்குள் பதுங்கியிருக்கிறது.

இப்போது அங்கு நடப்பதன் வீடியோவை சன் தொலைக்காட்சி வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.

இதுவா பக்தி… ஆசிரமங்கள் என்ற பெயரில் நடக்கும் இந்த மனநோயாளிகளின் கூடங்களை அனுமதிப்பது யார்?

இதற்கெல்லாம் ஒரு கேள்விமுறையே இல்லையா?

என்னதான் செய்கின்றன அரசுகள்?

எத்தனை இளைஞர்கள், பெண்கள் சீரழிக்கப்பட்டிருக்கிறார்களோ… ஆசிரமம் எனும் போர்வையில் இந்த கிரிமினல் கூடங்களை இழுத்து மூடத் தடையாக இருப்பது எது?

சன் வீடியோ -1


சன் வீடியோ பகுதி -2


சன் வீடியோ பகுதி -3

0 comments