திருச்சி மாவட்ட தலைமை இளைய தளபதி விஜய் நற்பணி இயக்கத்தின் கவுரவ தலைவர் பி.எஸ்.வீரா திருமணம் நேற்று திருச்சியில் தாஜ் திருமண ஹாலில் நடந்தது. நடிகர் விஜய் தலைமை தாங்கி வீரா திருமணத்தை நடத்தி வைத்தார்.

அதே மேடையில் 24 ஏழை ஜோடிகளுக்கு நடிகர் விஜய் இலவச திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்கள் விஜய் முன்னிலையில் மாலை மாற்றி கொண்டனர். அப்போது அவர், கட்டில், பீரோ, பாத்திரங்கள் உள்பட 51 பொருட்களை திருமண சீர்வரிசை பொருட்களாக வழங்கினார். மணமக்கள் ஒவ்வொரு ஜோடியாக விஜய் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

அப்போது பேசிய அவர், ‘’ஒரு படத்தில் நடித்து முடிக்க 6 மாதம் ஆகிறது. 6 மாதம் கஷ்டப்பட்டு நடிக்கிறோம். இந்த நிலையில் இது போன்று ரசிகர்களை சந்திக்கும் போது தான் எனக்கு உற்சாக டானிக் கிடைக்கிறது.

நானும் உங்களில் ஒருத்தன். உங்கள் குடும்ப பிரச்சினை தீர்ப்பதில் எனக்கு பங்கு உண்டு. சிறுவயதில் என் தங்கை இறந்து விட்டார். ஆனால் இப்போது 24 தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்து இருக்கிறேன். இதை நான் மறக்க முடியாது.

சுறா படத்தில் நான் பேசும் வசனத்தில், அமைதியாக போவதற்கு நான் ஒன்று புதிய ஆள்அல்ல. உன்வலையில் விழுவதற்கு இறால் அல்ல. நான் சுறா என்பேன். அதுபோல நான் யார் வலையிலும் சிக்க மாட்டேன்’’என்று பேசினார்.


0 comments