யாழ்ப்பாண பல்லைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் இன்றைய தினம் தமிழத்தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஆகிய இரு தரப்புக்களையும் சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் இரு தரப்புகளினதும் முரண்பாடுகள், தேர்தலின் பின்னர் அவற்றின் நிலைப்பாடுகள் தொடர்பாக குடாநாட்டு மக்களிடையே உள்ள சந்தேகங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினதும் வேட்பாளர்கள் அனைவரும் இந்த சந்திப்பின் போது பிரசன்னமாகியிருந்தனர். இந்த சந்திப்பின் பிரகாரமே அடுத்து வருகின்ற தேர்தலில் யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றிய மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினுடைய ஆதரவு நிலைப்பாடு தொடர்பான தீர்மானங்கள் வெளிவரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


0 comments