வரும் ஏப்ரல் 14 சித்திரைத் திருநாளையொட்டி விஜய் நடித்த சுறா மற்றும் சூர்யா நடித்த சிங்கம் படங்கள் வெளியாகின்றன.

விஜய் நடித்த சுறா படத்தை வரும் ஏப்ரல் இறுதி வாரத்தில் வெளியிடுவதாக முதலில் திட்டமிட்டிருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ஆனால் எப்படியாவது இந்தப் படத்தை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட்டுவிட வேண்டும் என்று விஜய் விரும்பினாராம்.

அதே சமயம், ஏப்ரல் 14-ம் தேதி சிங்கம் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தது சன். இந்தப் படத்தின் உரிமையையும் சன்தான் வாங்கியுள்ளது.

இதுவரை ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே ரிலீஸ் பண்ணி வந்தது சன். இந்த முறை சுறா, சிங்கம் இரு படங்களையும் ஏப்ரல் 14-ம் தேதியே வெளியிட்டுவிட தீர்மானித்துள்ளனர்.

இதனால் சுறா - சிங்கம் இரு படங்களுமே ஒரே நாளில் வெளியாக உள்ளன.

இது விஜய் - சூர்யா ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. இன்னொரு பக்கம் எந்தப் படத்துக்கு நல்ல தியேட்டர்களைப் பிடிப்பது என்பதிலும் லேசான உரசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

0 comments